வரலட்சுமி ஷூட்டிங்கில் தீ விபத்து: 2 பேர் பலி

varalakshmi
VM| Last Updated: ஞாயிறு, 31 மார்ச் 2019 (14:59 IST)
நடிகை வரலட்சுமி சரத்குமார் நடித்துவரும் திரைப்பட  ஷூட்டிங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
 
நடிகை வரலட்சுமி சரத்குமார்  கன்னடப் படம் ஒன்றில் நடித்து வருகிறார் .  நடிகர் அர்ஜுனின் உறவினர் சிரஞ்சீவி சார்ஜா நடிக்கும் 'ரணம்' என்ற  இந்த படத்தின்  சண்டைக் காட்சிகள  படப்பிடிப்பு பெங்களூரை அடுத்த பாகலூரு பகுதியில் நடந்தது.
 
அப்போது காட்சி அமைப்பின்படி கார் மோதி தீப்பிடிப்பது போன்ற அமைப்புகள் செய்யப்பட்டபோது அங்கிருந்த எரிவாயு சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியது. 
 
இந்த விபத்தில் படப்பிடிப்பை காண சென்ற ஆயிரா, சுமைரா ஆகிய இருவர் உயிரிழந்தனர். காயம் அடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக இயக்குனர், தயாரிப்பாளர் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


இதில் மேலும் படிக்கவும் :