1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 25 ஆகஸ்ட் 2020 (14:05 IST)

இஸ்லாமிய அரசில் 1100 ஆண்டுகளுக்கு முன்பு புதைத்து வைக்கப்பட்ட தங்க நாணயங்கள் கண்டுபிடிப்பு

மத்திய இஸ்ரேலில் நடந்து வரும் அகழாய்வு ஒன்றில் 1100 ஆண்டுகளுக்கு முன்பு புதைத்து வைக்கப்பட்ட 425 தங்க நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இஸ்லாமிய அரசின் தொடக்கக் காலத்தில் அந்த பகுதி அப்பாஸிய கிலாபத் ஆட்சியின் கீழ் இருந்த போது பயன்படுத்தப்பட்ட நாணயங்களாக அவை இருக்கலாம்  என கருதப்படுகிறது.
 
845 கிராம் எடை உள்ள அந்த நாணயங்கள் புதைக்கப்பட்ட காலத்தில் பெரும் மதிப்பு உடையதாக இருக்கலாம். அந்த நாணயங்களை கொண்டு கிலாபத்தின்  அட்சியின் கீழ் உள்ள ஒரு நகரத்தில் சொகுசு வீடு ஒன்றை வாங்கி இருக்க முடியும் என்கின்றனர் வல்லுநர்கள்.
 
அந்த நாணயங்களுக்கு சொந்தக்காரர்கள் யார்? ஏன் அவர்கள் அதனை புதைத்து வைத்தனர் அல்லது ஏன் அதனை மீண்டும் எடுக்க வரவில்லை என்பது ஒரு  புதிராகவே உள்ளது.
 
1100 ஆண்டுகளுக்கு முன்பு அந்த நாணயங்களை புதைத்து வைத்த நபர், மீண்டும் எடுக்கும் நோக்கத்துடனே புதைத்து வைத்திருக்கிறார். நாணயங்கள் உள்ள அந்த  பாத்திரத்தை ஆணி அடித்து மூடி வைத்திருக்கிறார் என்கிறார் அகழாய்வின் இயக்குநர் லியாட் நடாவ் ஜிவ்.
 
கீழடியில் கிடைத்த நுண்கற்கால கருவிகளும் எரிந்த நெல் மணிகளும்

 
கீழடித் தொகுதியில் நடந்து வரும் அகழாய்வில் நுண்கற்கால கருவிகள், கரிமயமாகிப்போன நெல்மணிகள் உள்ளிட்டவை கிடைத்திருப்பது ஆய்வாளர்களிடம்  உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மாநிலம் முழுக்க நடந்துவரும் ஆய்வுகளில் ஆயிரக்கணக்கான தொல் பொருட்களும் நூற்றுக்கணக்கான முதுமக்கள் தாழிகளும்  சேகரிக்கப்பட்டுள்ளன.
 
தமிழ்நாட்டில் தற்போது கீழடி தொகுதிகள், ஆதிச்சநல்லூர், சிவகளை, கொடுமணல் ஆகிய இடங்களில் அகழாய்வுப் பணிகள் நடந்துவருகின்றன. இந்த அகழாய்வுப் பணிகள் எந்த நிலையில் உள்ளன, கிடைத்த பொருட்கள் என்னென்ன என்பது குறித்த தகவல்களை மாநில தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வெளியிட்டார்.