1100 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு சிவலிங்கம் கண்டுபிடிப்பு

sivalingam
sinoj| Last Updated: வியாழன், 28 மே 2020 (17:54 IST)

வியட்நாம் நாட்டில் இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் மேற்கொண்ட ஆய்வில் சுமார் 1100 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு
சிவலிங்கம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.


வியட்நாம் நாட்டில் உள்ள குவாங்க் நாம் மாகாணத்தில் உள்ள மை சன் பகுதியில் சாம் என்ற கோயில் உள்ளது. இதை யுனெஸ்கோ உலக பாரம்பரிய
பகுதியாக அங்கீகரித்துள்ளது.

இந்தக் கோயில் கெமர் பேரரசின் மன்னர் இரண்டாம் இந்திரவர்மன் காலத்தில் கட்டப்பட்டது. இங்கு இந்திய தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது 9 ஆம் நூற்றாண்டில் ஒரே கல்லால் செய்யப்பட்ட சிவலிங்க, மண்ணுக்குள் கண்டெடுக்கப்பட்டது. இதனால் இந்தியா –வியட்நாம் இருநாடுகளுக்கு இடையேயான நாகரிகம் தொடர்ப்பு வெளிப்பட்டுள்ளதாகப் பலரும் தெரிவித்துள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :