வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : வியாழன், 30 மே 2019 (16:02 IST)

உலகக் கோப்பையை சிறப்பாக்க பிபிசி ஏசியன் சர்வீஸ்!!

2019 ஆம் ஆண்டின் உலகக் கோப்பை ரசிகர்களுக்கு மேலும் மேம்பட்ட வகையில் சிறப்பாக்கி கொடுக்க பிபிசி ஏசியன் சர்வீஸ் உதவுகிறது. 
 
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மே 30 முதல் ஜூன் 14 வரை நடக்கவுள்ளது. 45 லீக் போட்டிகள் மற்றும் 2 அரையிறுதி போட்டிகள் மற்றும் இறுதியாட்டம் என 48 போட்டிகள் சுமார் 12 நகரங்களில் நடக்கவுள்ளது.
 
இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம், மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 10 அணிகள் மோதுகின்ற இந்த போட்டியில் முதல் பரிசு 40 லட்சம் டாலராகும்.


 

 
முன்னதாக உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான துவக்க விழா, லண்டனில் பக்கிங்ஹாம் அரண்மனை அருகே கோலாகலமாக நடந்தது. இன்று லண்டன் ஒவல் மைதானத்தில் இங்கிலாந்திற்கும்  தென் ஆப்பிரிக்காவிற்கும் நடக்கும் போட்டி தொடங்கியது.
 
இந்த போட்டியின் போது பங்களா, ஹிந்தி, மராத்தி, பாஷ்டோ, சிங்களம், தமிழ் மற்றும் உருது ஆகிய மொழிகளில் பிபிசியின் சேவைகள் இருக்கும். பிபிசி வழக்கத்திற்கு மாறாக இந்த முறை போட்யை மேம்பட்ட கவரேஜ் மூலம் ரசிகர்களுக்கு வழங்க உள்ளது. 
 
பிபிசி போட்டிகளை இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் இருந்து ஒளிபரப்பவுள்ளது. வர்ணனையும் அதே போல் உலகளாவிய பார்வையாளர்களுகாக பல மொழிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.