செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: புதன், 21 ஆகஸ்ட் 2019 (17:18 IST)

அமேசான்: பற்றி எரிகிறது பிரேசில் காடுகள், எச்சரிக்கும் விஞ்ஞானிகள் - வன சுரண்டலின் கதை

வரலாற்றில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு பிரேசிலில் உள்ள அமேசான மழைக் காடுகள் இவ்வாண்டு பல முறை பற்றி எரிந்துள்ளதாக எச்சரிக்கிறது பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி முகமை.


 
2018 தரவுகளோடு ஒப்பிடுக்கையில் இவ்வாண்டு மழைக் காடுகள் பற்றி எரியும் நிகழ்வானது 83 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளதாக பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி முகமை கூறுகிறது.


 
அதாவது இவ்வாண்டு இதுநாள் வரை 72 ஆயிரம் காட்டுத்தீ சம்பவங்கள் அமேசானில் நிகழ்ந்துள்ளன. பிரேசிலில் காடுகள் அழிக்கப்படுவது தொடர்பாக செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியானதை அடுத்து அண்மையில் அந்நாட்டு அதிபர் சயீர் பொல்சனாரூ பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி முகமை தலைவரை பணிநீக்கம் செய்தார். மேலுல், அந்தப் புகைப்படங்களை பொய்யானவை என்றார். இப்படியான சூழலில் இந்த தரவுகள் வெளியாகி உள்ளன.