வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 7 டிசம்பர் 2019 (13:53 IST)

தத்தெடுப்பு நிகழ்ச்சிக்கு வாங்க - பள்ளி தோழர்களை அழைத்த 5 வயது சிறுவன்

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் சட்ட ரீதியான தனது தத்தெடுப்பு நிகழ்ச்சிக்கு தன் மழலையர் பள்ளி தோழர்கள் அனைவரையும் அழைத்து பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளான் 5 வயது சிறுவன் ஒருவன்.
 
மைக்கேல் என்ற இந்த சிறுவன் கென்ட் கவுண்டியில் உள்ள தன்னை தத்தெடுத்த புதிய வீட்டுக்கு வியாழக்கிழமையன்று முறைப்படி சென்றான். இது தொடர்பாக ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட புகைப்படத்தில் இந்த சிறுவன் தன்னை தத்தெடுத்த பெற்றோருடன் அமர்ந்திருப்பதும், அவனது மழலையர் பள்ளி தோழர்கள் இதய வடிவிலான அட்டையை மகிழ்ச்சியை தெரிவிக்கும் விதமாக அசைத்து கொண்டிருப்பதும் தெரிகிறது.
 
இந்த நிகழ்ச்சியில் மைக்கேலின் புதிய பெற்றோரிடம் அவனது பள்ளி தோழர்கள் ஒவ்வொருவராக அறிமுகம் செய்து கொண்டனர். தத்தெடுக்கப்பட்ட வீட்டுக்கு சென்ற மைக்கேலுடன் அவனது புதிய பெற்றோர் மற்றும் அவனது பள்ளி தோழர்கள் அனைவரும் அமர்ந்திருந்த புகைப்படம் ஃபேஸ்புக்கில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட முறை பகிரப்பட்டுள்ளது.