1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By
Last Modified: வெள்ளி, 31 ஆகஸ்ட் 2018 (17:40 IST)

செப்டம்பர் மாத ராசிபலன்கள் - தனுசு

தனுசு ராசியினருக்கு செப்டம்பர் மாதத்திற்கான ராசிபலன்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
 
தனுசு: (மூலம், பூராடம்,  உத்திராடம் 1ம் பாதம்)

கிரகநிலை:

ராசியில் சனி - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திரன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் ராஹூ - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் - லாப ஸ்தானத்தில் குரு, சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. 

கிரகமாற்றம்:

15.09.2018 அன்று பகல் 2.06 மணிக்கு புதன் பகவான்  பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

17.09.2018 அன்று மாலை 05.16 மணிக்கு சூர்ய பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இந்த மாதம் தொழில் அதிபதியை ஆட்சி நிலையில் அமையப்பெறும் தனுசு ராசி அன்பர்களே, நீங்கள் எதிர்பார்த்திருந்த நீண்ட நாளைய ஆசைகள் நிறைவேறும். வரவேண்டிய பணம் வந்து சேரும். அல்லது அதற்கான காரியங்கள் முன்னேற்றப்பாதையில் செல்லும். மனதை உறுத்திக் கொண்டிருந்த சில விஷயங்கள் தெளிவு பெறும். இதனால குடும்பத்திலும் மகிழ்ச்சி நிலவும்.

குடும்பத்தில் அவ்வப்போது சில சண்டைகள் வரலாம். நீங்கள் ஒருவரையொருவர் புரிந்துகொள்வதன் மூலம் அவற்றைத் தவிர்க்கலாம். ஒருவர் கூறும் அறிவுரையை தட்டாமல் கேட்டுக் கொள்ளுங்கள். எதிர்த்துப் பேசி வீண் சச்சரவுகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள். குடும்ப விஷயங்களில் சற்று ஆர்வமுடன் செயல்பட்டால் மனசங்கடங்களைத் தவிர்க்கலாம். கணவன் - மனைவியிடயே கலந்து ஆலோசித்து எந்த காரியத்தையும் செய்வது நல்லது.

தொழில் - வியாபாரிகளுக்கு லாபமான காலமாக இருக்கும். நிறுத்தி வைத்திருந்த சில முயற்சிகளை இப்போது மேற்கொள்வது நல்லது. வெளியூரிலிருந்து வர வேண்டிய பணம் வந்து சேரும். வெளியூர் சென்று நீங்கள் முயற்சிக்கும் காரியங்களும் வெற்றியடையும்.

உத்யோகஸ்தர்கள் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். மேலிடம் உங்களுக்கு ஆதரவாக இருக்கும். மனதில் தேவையில்லாத குழப்பங்கள் தோன்றினாலும் அவை தானாகவே தெளிவு பெறும். கவலை வேண்டாம்.

பெண்களுக்கு சில உடல் உபாதைகள் வரலாம். கவனமுடன் செயல்பட்டு அவற்றை சரி செய்து கொள்ளுங்கள். சிறு தொந்தரவாக இருந்தாலும் கவனம் எடுத்துக் கொள்வது நல்லது.

மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். அதிகாரம் சம்பந்தப்பட்ட படிப்புகளில் சிறந்து விளங்குவார்கள்.

கலைத்துறையினர் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. கஷ்டம் தீரும். பேச்சின் இனிமையால் காரியம் கைகூடும்.  சுப பலன்களை தரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.

அரசியல்வாதிகளுக்கு இந்த வாரம் மிகவும் யோகமாக இருக்கும். மேல் பதவி பெறுவத்ற்கு ஏற்ற கால மிது. சமூக   வேலைகளில் இருப்பவர்களுக்கு புகழ் விருது கிடைக்கும்.

மூலம்:

இந்த மாதம் குடும்பத்தில் தாய்வழி உறவினர்களுடன் சின்ன கருத்து மோதல்கள் வரலாம். பூர்வீக சொத்துகளில் இருந்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். அமைதியாக விட்டுக் கொடுத்து போவதினால் மட்டுமே ஆதாயம் கிடைக்கும்.

பூராடம்:

இந்த மாதம் நீங்கள் நல்வழியில் செல்ல பெரியோர் ஒருவருடன் ஒத்துழைப்பு கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை முடிவுக்கு வரும். உத்தியோகஸ்தர்கள் அலைச்சலும், வேலைப்பளுவும் ஓரளவு இருக்கத்தான் செய்யும்.

உத்திராடம் 1ம் பாதம்:

இந்த மாதம் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு கிடைக்கும். சிலர் அதிகார அந்தஸ்திற்கு உயர்த்தப்படுவீர்கள். நீங்கள் சென்ற இடமெல்லாம் அனுகூலம் ஏற்படும்.

சந்திராஷ்டம தினங்கள்: 6, 7, 8

அதிர்ஷ்ட தினங்கள்: 1, 27, 28, 29

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு – புதன்

பரிகாரம்: நவகிரகங்களை ஒன்பது முறை வலம் வந்து நல்லெண்ணெய் விளக்கேற்றவும்.