திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By
Last Modified: வெள்ளி, 31 ஆகஸ்ட் 2018 (17:24 IST)

செப்டம்பர் மாத ராசிபலன்கள் - கடகம்

கடகம் ராசியினருக்கு செப்டம்பர் மாதத்திற்கான ராசிபலன்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


கடகம்: (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

கிரகநிலை:

ராசியில் ராஹூ - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், புதன் - சுக ஸ்தானத்தில் குரு, சுக்ரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது - தொழில் ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. 

கிரகமாற்றம்:

15.09.2018 அன்று பகல் 2.06 மணிக்கு புதன் பகவான்  தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

17.09.2018 அன்று மாலை 05.16 மணிக்கு சூர்ய பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இந்த மாதம் தைரியாதிபதியை ஆட்சி நிலையில் அமையப்பெறும் கடக ராசி அன்பர்களே, துணிவுடன் எந்த காரியத்தையும் செய்து முடிக்க நினைப்பீர்கள். உங்களுக்கு கொடுக்கப்பட்ட காரியங்களில் எந்த யோசனையும் இன்றி செய்து முடிக்க முடியும் என்ற மனதைரியத்துடன் செய்வீர்கள். அது உங்களுக்கு வெற்றியைத் தருவதாகவும் இருக்கும். தெய்வ அனுகூலம் உங்களை அனைத்து காரியங்களிலும் உடன் இருந்து வழி நடத்தும்.

குடும்பத்தில் மிகவும் ஆர்வமாக செயல்படுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் பிரச்சனைகளைக் கேட்டு நீங்களே முன்னின்று தீர்த்து வைப்பீர்கள். உடல்நலம் சரியில்லாதவர்களின் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். சகோதரர் - சகோதரி யாரேனும் பிரிந்து சென்றிருந்தால் இப்போது ஒன்று சேர்வதற்கு வாய்ப்புள்ளது. உற்றார் -  உறவினரின் வருகையால் இல்லம் சந்தோஷத்தில் மூழ்கும்.

தொழில் அமோகமாக நடக்கும். நிறைய வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. சேமிப்பில் கவனத்தை செலுத்துங்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்காததால் சில சட்ட சிக்கல்களை சந்திக்க நேரிடும். போட்டிகளைச் சமாளிக்க வேண்டி வரும்.

உத்தியோகத்தில் வேலை பார்த்து வரும் இடத்தில் நல்ல மதிப்பும், மரியாதையும் ஏற்படும். உடன் பணிபுரிபவர்கள் நன்கு ஒத்துழைப்பு நல்குவார்கள். மேலிடத்தில் நற்பெயர் கிடைக்கும். வழக்கத்தை விட சற்று அதிகமாக உழைக்க வேண்டி வரும்.

பெண்கள் பேச்சில் நிதானம் தேவை. குறிப்பிட்ட இடங்களுக்கு சென்று வரும் போது பொறுமையைக் கையாளுங்கள்.

மாணவர்கள் வெளிநாடு சென்று மேற்கல்வி பயில விரும்புவோர் இப்போது அதற்கான நற்செய்தியை எதிர்பார்க்கலாம்.

அரசியல்துறையினருக்கு எதிலும் உடனடி முடிவு கிடைக்காமல் இழுபறியான நிலை காணப்படும். மற்றவர்களிடம் கவனமாக பேசுவது நல்லது.

கலைத்துறையினர் குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை காணப்படும். நீங்கள் செய்யும் காரியங்களுக்கு எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

புனர்பூசம் 4 :

இந்த மாதம் எதிர்பார்த்திருந்த பணி இடமாற்றம் உங்களை வந்து சேரும். வங்கிக் கடன்கள் கிடைத்து அதன் மூலம் சில பிரச்சனைகளை கட்டுக்குள் வைக்க முடியும்.தொழிலதிபர்கள் தொழிலில் முன்னேற்றம் காண்பார்கள்.

பூசம்:

இந்த மாதம் நற்சுகமும் பொருளாதார மேம்பாடும் உண்டாகும். நன்மைகள் கிடைக்கும். மதிப்பு, மரியாதை கூடி செல்வாக்கு அதிகரிக்கும். உடல் நலனைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும்.

ஆயில்யம்:
இந்த மாதம் வேலையில்லாமல் தவித்தவர்களுக்கு தகுந்த சம்பளத்துடன் நல்ல வேலை கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஆனந்தமும் பெருகும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் இனிதே நடக்கும்.

சந்திராஷ்டம தினங்கள்: 22, 23,24

அதிர்ஷ்ட தினங்கள்: 15, 16, 17

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் – வியாழன்

பரிகாரம்: திங்கட்கிழமைகளில் அம்மனுக்கு வெள்ளை மலர் அணிவியுங்கள்.