திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம் விவரங்கள்
Written By
Last Modified: வெள்ளி, 31 ஆகஸ்ட் 2018 (16:42 IST)

செப்டம்பர் மாத ராசிபலன்கள் - மேஷம்

மேஷம் ராசியினருக்கு செப்டம்பர் மாதத்திற்கான ராசிபலன்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
 
மேஷம்: (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

கிரகநிலை:

ராசியில் சந்திரன் - சுக ஸ்தானத்தில் ராஹூ - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் - களத்திர ஸ்தானத்தில் குரு, சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் சனி - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன. 

கிரகமாற்றம்:

15.09.2018 அன்று பகல் 2.06 மணிக்கு புதன் பகவான்  பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

17.09.2018 அன்று மாலை 05.16 மணிக்கு சூர்ய பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

இந்த மாதம் ரண ருண ரோகாதிபதியை ஆட்சி நிலையில் அமையப்பெறும் மேஷ ராசி அன்பர்களே, உடல் நலம் சீராகும். நீண்ட நாட்களாக தொல்லை கொடுத்து வந்த உடல் பாதிப்புகள் அகலும். மனதில் உற்சாகம் பிறக்கும். எதையும் சாதிக்கும் துணிவு உண்டாகும். புதிய முயற்சிகள் செய்ய முற்படுவீர்கள். பல லாபம் தரக்கூடிய திட்டங்களை யோசித்து செயல்படுத்துவீர்கள்.

குடும்பத்தில் பெரியோர்களின் நல்லாசியும், ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள். சொந்தங்கள் வீட்டிற்கு வாய்ப்புண்டு. அவர்களின் வருகை மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும்.  நீண்ட நாட்களாக வாங்க இருந்த பொருட்களை வாங்க திட்டமிடுவீர்கள்.  எல்லோரிடமும் விட்டுக் கொடுத்து பேசி அனைவரையும் தங்கள் பால் வைத்திருக்க முயற்சி செய்வீர்கள். சொத்து விவகாரங்களில் மற்றவர்களின் பேச்சை கேட்க வேண்டாம்.

தொழிலில் எதிர்பார்த்தபடி லாபம் கிடைக்கும். சிறு வியாபாரிகள் உழைப்புக் கேற்றாற்போல் ஆதாயத்தை எதிர்பார்க்க முடியும். சக பங்கு தாரர்களுடன் நல்லிணக்கம் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் பிரச்சினை எதுவும் இருக்காது. புதுக் கடன்களை வாங்கி பழைய கடன்களை அடைக்க நேரிடும். .

உத்தியோகத்தில் தேவையில்லாத பிரச்சினைகளில் தலையீடு வேண்டாம். சக ஊழியர்களால் பிரச்சினை ஏற்படலாம். இழுபறியாக இருந்த வேலைகளை நீங்களே முன்னின்று முடிக்க வேண்டி வரும். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் அன்பர்களுக்கு இப்போது நல்ல செய்தி வரும்.

பெண்கள் பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம். கணவரை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைவார்கள்.

மாணவர்கள் கல்வியில் மேன்மை அடைய கவனமுடன் படிக்க வேண்டியது அவசியம். ஆசிரியர்கல் உறுதுணையாக இருப்பார்கள்.

அரசியல் துறையினருக்கு எதிர்பார்த்த பண உதவி கிடைக்கலாம். மேலிடத்தை அனுசரித்து செல்வது நல்லது. பணிகள் நிறைவடைய அலைய வேண்டி இருக்கும். புதிய பொறுப்புகள் சிலருக்கு கிடைக்கலாம்.

கலைத்துறையினருக்கு சகஜநிலை காணப்படும். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும். சக கலைஞர்களுடன் இருந்து வந்த இடைவெளி குறையும். ஆன்மிக பயணம் செல்லும் நிலை உருவாகும். மற்றவர்கள் ஆலோசனை கேட்டு உங்களை நாடி வருவார்கள். உங்களை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள்.

அஸ்வினி:
இந்த மாதம் நல்ல பணப்புழக்கமும், பொருளாதார ஏற்றமும் இருக்கும். காரியத் தடைகள் நீங்கி, அனுகூலம் பிறக்கும். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் சந்தித்து முறியடிக்கும் வல்லமையைப் பெறலாம்.
பரணி:
இந்த மாதம் வேலையில் உங்கள் தனித்தன்மை வெளிப்படும். எதிரிகளின் இன்னல்கள் இருக்கும் இடம் தெரியாமல் போகும். முன்னேற்றம் கண்டிப்பாக உண்டு என்பதை உறுதியாக சொல்லலாம்.

கார்த்திகை 1 :
இந்த மாதம் குடும்பத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும். தூரத்தில் இருக்கும் உறவினரால் நன்மை ஏற்படும். கணவன், மனைவியரிடையே அவ்வப்போது பிரச்சனைகள் வந்து போகும்.

சந்திராஷ்டம தினங்கள்: 15, 16, 17

அதிர்ஷ்ட தினங்கள்: 9, 10

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு -  புதன்

பரிகாரம்: தினமும் சிவபுராணம் வாசித்து சிவபெருமானுக்கு வில்வமாலை சாற்றுங்கள்.