1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தினசரி ஜாதகம்
Written By Sasikala

இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் !! - 21/09/2020

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோதிடர் கணித்த இன்றைய ராசிபலன்கள். 12 ராசிகளுக்கான இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை அறிந்து  கொள்ளலாம்.
 
1. மிதுனம்:
 
இன்று மிதுன ராசிக்காரர்களுக்கு காரிய தாமதம், உடல் சோர்வு, வீண்பகை போன்றவை ஏற்படலாம். உங்களை கண்டு அடுத்தவர் பொறாமை படக்கூடும். தொழில்  வியாபார காரியங்களுக்காக அலைய வேண்டி இருக்கும்.
 
2. கடகம்:
 
இன்று கடக ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்களால் டென்ஷன் உண்டாகலாம். மன அமைதி பாதிக்கும் படியான சூழ்நிலை இருக்கும். திடீர்  செலவு உண்டாகும்.
 
3. விருச்சிகம்:
 
இன்று விருச்சிக ராசிக்காரர்களுக்கு மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவு கூடும். கல்வியில் முன்னேற கடினமாக படிக்கவேண்டி இருக்கும். துணிச்சலுடன்  செயல்பட்டு சில வேலைகளை செய்யவேண்டிவரும்.
 
4. மகரம்:
 
இன்று மகர ராசிக்காரர்களுக்கு யாரிடமும் எதிர்த்து பேசி விரோதத்தை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய எண்ணம்  மேலோங்கும்.
 
5. மீனம்:
 
இன்று மீன ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத திடீர் செலவுகள் வீண் அலைச்சல் உண்டாகலாம். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் கஷ்டமான பாடங்களையும் மனம் துவளாமல் படிப்பீர்கள்.