புதன், 25 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தினசரி ஜாதகம்
Written By Sasikala
Last Modified: சனி, 26 செப்டம்பர் 2020 (09:44 IST)

இன்று அதிர்ஷ்டத்தை பெறும் ராசிக்காரர்கள் !! - 26/09/2020

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோதிடர் கணித்த இன்றைய ராசிபலன்கள். 12 ராசிகளுக்கான இன்று அதிர்ஷ்டத்தை பெறும் ராசிக்காரர்கள் யார் என்பதை அறிந்து 
கொள்ளலாம்.

 
மேஷம்:
 
இன்று மேஷ ராசிக்காரர்களுக்கு எல்லாவிதமான காரியங்களும் சாதகமான பலன்தரும். பணவரத்து திருப்திதரும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை தீரும். 
 
ரிஷபம்:
 
இன்று ரிஷப ராசிக்காரர்களுக்கு பணவரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். வாக்கு வன்மையால் எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணியாட்கள்  மூலம் காரிய அனுகூலம் உண்டாகும்.
 
மிதுனம்:
 
இன்று மிதுன ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சியும், குதூகலமும் ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும்.
 
சிம்மம்:
 
இன்று சிம்ம ராசிக்காரர்களுக்கு பணவரத்து அதிகரிக்கும்.நீண்ட நாட்களாக  முடிக்க முடியாமல் இருந்த ஒரு காரியத்தை செய்து முடிப்பீர்கள். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய வேலைகள் திருப்திகரமாக நடந்து முடியும்.
 
கன்னி:
 
இன்று கன்னி ராசிக்காரர்களுக்கு தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். வியாபாரத்தில் இருந்த பணபிரச்சனை குறையும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும்.
 
துலாம்:
 
இன்று துலாம் ராசிக்காரர்களுக்கு முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். ராசியாதிபதி சுக்கிரனின் சஞ்சாரம் பணம் சம்பாதிக்கும் திறமையை  அதிகப்படுத்தும். உடல் நலம் சீரடையும்.
 
விருச்சிகம்:
 
இன்று விருச்சிக ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் குறையும். குடும்பத்திற்கு  தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
 
மீனம்:
 
இன்று மீன ராசிக்காரர்களுக்கு நிம்மதியும், சுகமும் அதிகமாகும். புண்ணிய தலங்களுக்கு யாத்திரை செல்ல வேண்டி வரலாம். பணவரத்து திருப்திகரமாக இருக்கும்.  பலவகையிலும் பிறர் உதவி கிடைக்க பெறுவீர்கள்.