செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தினசரி ஜாதகம்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 9 மே 2021 (05:00 IST)

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (09-05-2021)!

இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.


மேஷம்:
இன்று கோபத்தை கட்டுப்படுத்தினால் வெற்றி நிச்சயம். புத்திக் கூர்மையுடன் செயல்களை செய்து எதிலும் வெற்றி பெறுவீர்கள். வசதிகள்  அதிகரிக்கும். மதிப்பும், மரியாதையும் கூடும். ஆனால் வீண் செலவுகள் உண்டாகும். மனதுக்கு பிடிக்காத இடத்திற்கு சென்று வரவேண்டி இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

ரிஷபம்:
இன்று தொழில் வியாபாரம் தொடர்பாக பயணங்கள் சென்று வரவேண்டி இருக்கும். வியாபாரம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திப்பார்கள். குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகலாம் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

மிதுனம்:
இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே தேவையற்ற மன வருத்தம் உண்டாகலாம் கவனம் தேவை. மருத்துவம் தொடர்பான செலவும் ஏற்படலாம். ஆயுதம், நெருப்பு ஆகியவற்றை கையாளும்போது கவனமாக இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

கடகம்:
இன்று புத்தி கூர்மையுடன் செயல்பட்டு காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் சக மாணவர்களுடன் பழகும்போது கவனம் தேவை. கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

சிம்மம்:
இன்று தடை தாமதம் உண்டாகும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தள்ளி போடுவது நல்லது. மனக்கவலை தீரும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். எந்த நிலையிலும் அடுத்தவர் பற்றி ரகசியங்களை வெளியே சொல்லாமல் மனதில் வைத்துக்கொள்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

கன்னி:
இன்று எந்த ஒரு காரியமும் வெற்றியடைவதுடன் லாபகரமாகவும் இருக்கும். பணவரத்து அதிகரிக்கும். செயல் திறன் மேலோங்கும். இழுபறியாக இருந்த ஒரு சில விஷயங்கள் நல்ல முடிவுக்கு வரும். வீடு, வாகனங்கள் வாங்கும் நிலை உருவாகும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

துலாம்:
இன்று தொழில், வியாபாரம் முன்னேற்றம் காணப்படும். விவசாயம், ரியல் எஸ்டேட் தொழில் லாபம் தரும். வியாபார வளர்ச்சிக்கு புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிலுவையில் உள்ள பணம் கைக்கு கிடைக்கும். பயணங்களால் லாபம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

விருச்சிகம்:
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குடும்பத்திற்கு  தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். நீண்ட நாட்களாக வாங்க  நினைத்த ஆடை, ஆபரணம் வாங்க நேரிடும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் விருந்து நிகழ்ச்சிகளுக்கு சென்று வருவீர்கள். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 7, 9

தனுசு:
இன்று பணவரத்து அதிகரிக்கும். எந்த ஒரு காரியமும் லாபகரமாய் நடந்து முடியும். செயல் திறன் கூடும். மாணவர்கள் பாடங்களை மனநிறைவுடன் படிப்பீர்கள். கூடுதல் மதிப்பெண் பெற மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியடையும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

மகரம்:
இன்று காரியங்களில் தடை தாமதம் உண்டாகும். வீண் அலைச்சல் ஏற்படும். பணவரத்து கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். எதையும் திட்டவட்டமாக பேசி காரியங்களில் குழப்பம் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

கும்பம்:
இன்று எதையும் ஆராய்ந்து பார்த்த பிறகே அதை செய்ய முற்படுவீர்கள். தொட்ட காரியம் வெற்றியில் முடிந்தாலும் சற்று கால தாமதம் ஆகலாம். பணவரத்து கூடும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். வேலை பற்றிய கவலை நீங்கும். நிர்வாகத்தின் ஆதரவும் இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 9

மீனம்:
இன்று தொழில், வியாபாரம் மிகவும் சிறப்பாக நடைபெறும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். வியாபாரம் மற்றும் தொழிலை விரிவுபடுத்துவது பற்றி திட்டங்களை செயல்படுத்துவீர்கள். பயணங்கள் சாதகமான பலனை தரும். உத்தியோகஸ் தர்கள் முன்னேற்றம் காண்பார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5