வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தினசரி ஜாதகம்
Written By
Last Modified: வியாழன், 5 செப்டம்பர் 2019 (05:00 IST)

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (05-09-2019)!

இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.

மேஷம்      
இன்று சக வியாபாரிகளால் தொந்தரவு ஏற்படும். சேமிப்பிற்கு முயற்சி செய்யுங்கள். ஏனெனில் வருமானம் அதிகமாக வரும். எக்காரணத்தைக் கொண்டும் மற்றவர்களில் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம். முயற்சிகள் சாதகமான பலன் தரும்.  பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். எதிர்ப்புகள் விலகும். புதிய நண்பர்கள் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். மரியாதை கூடும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும்.  தன்னம்பிக்கையுடன் செயலாற்றுவீர்கள்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 5, 6 
 
ரிஷபம்      

இன்று தங்களுக்கு உள்ள வேலையை மட்டும் சரியாக செய்யுங்கள். மற்றவர்களின் பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். அது உங்களுக்கு பெரும் தலைவலியாக அமைந்து விடலாம். பண விஷயங்களில் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள். தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். தேவையான பண உதவியும் கிடைக்கும். கடன் தொல்லை குறையும். தொழில் போட்டிகள் நீங்கும்.  கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கி ஒற்றுமை உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 4, 6

மிதுனம்     
இன்று புதிய வீடு, வாகனம் போன்றவைகளில் அதிக லாபத்தை காணலாம். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கும் சரியான பேச்சுவார்த்தைகள் மூலம் லாபம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். பெரியோர் ஆசி கிட்டும். பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும். மனோ தைரியம் கூடும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரிய வெற்றி காண்பீர்கள். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். மனதில் நம்பிக்கை உண்டாகும்.  உங்களுக்கு துணிச்சலான சில முடிவுகளை எடுப்பதன் மூலம் நன்மைகளைப் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 9 

கடகம்
இன்று சுப நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வீர்கள். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் பேச்சில் நிதானத்துடன் நடந்து கொள்ளுங்கள்.புதிய வாகனம் வாங்கும் எண்ணமிருப்பின் அதை  சற்று தள்ளி வையுங்கள். மனதில் மகிழ்ச்சியான எண்ணங்கள் வரும். திடீரென்று அவசர முடிவை எடுக்க வேண்டியிருக்கும். கோபத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் நட்பு, உறவினர்களிடம் சுமூகமான நிலை நீடிக்கும். உல்லாச பயணம் செல்லும் வாய்ப்புகளும் கிடைக்கும். மனை, வீடு வாங்க எடுக்கும் முயற்சிகள் சற்று தாமதமாக நடக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 1, 5

சிம்மம்      
இன்று அனைவரிடமும் விட்டுக் கொடுத்து போவது நல்லது. குழப்பத்தின் காரணமாக முடிவுகள் தவறாக அமைந்து விடலாம். ஆதலால் உங்களின் நம்பிக்கைக்கு பாத்திரமான ஒருவரை துணைக்கு வைத்துக் கொள்வது மிகவும் உத்தமம். எதிலும் நிதானத்தை கடைப்பிடிப்பது நன்மை தரும். திருமண முயற்சிகள் கைகூடும். தடைபட்ட பணவரத்து தடை நீங்கி கைக்கு வந்து சேரும். குழந்தைகள் பற்றிய மனக்கவலை நீங்கும். கணவன்- மனைவிக்கிடையே இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். தந்தை வழியில் இருந்து வந்த பிரச்சனைகள்  சரியாகும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 5, 6

கன்னி
இன்று சிலருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட வாய்ப்புண்டு. தக்க நேரத்தில் உணவு அருந்த முடியாமல் அதனால் வயிற்று உபாதைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். வியாபாரிகளுக்கு மனக்குழப்பங்கள் ஏற்படக் கூடும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோக மாற்றம் உண்டாகலாம். சொத்துக்கள் மூலம் கிடைக்க வேண்டியவை இழுபறியாக இருக்கும். கடன் பிரச்சனை தீரும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில்  செல்லும் போதும் ஆயுதங்களை கையாளும் போதும் கூடுதல் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 4, 6

துலாம்
இன்று மனநிறைவான நாள். செய்யும் காரியங்கள் அனைத்திலுமே திருப்தியும், வெற்றியும் காணப்படும். குடும்பத்தில் குதூகலமான சுப பலன்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே பந்த பாசம் அதிகரிக்கும். குழந்தைகளின் மூலம் மனம் மகிழும்படியான சூழ்நிலை உருவாகும். நண்பர்கள் உறவினர்களுடன் கவனமாக பேசி பழகுவது நல்லது.  கடன் பிரச்சனை தீரும். செல்வநிலை உயரும். பெற்றோருக்கு பெருமை தேடித் தருவீர்கள். எதிர்பார்த்த நல்ல பலன்கள் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகம் தொடர்பான இடமாற்றம் ஏற்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 9

விருச்சிகம்  
இன்று இனம்புரியாத கவலை மனதில் குடி கொண்டிருக்கும். தொழிலை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். தாங்கள் இப்போது உள்ள வேலையை மட்டும் கவனித்து வாருங்கள். எதிலும் நிதானத்துடன் முடிவு எடுங்கள். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற சூழ்நிலைகள் ஏதுவாக இருக்கும். செலவை  குறைப்பதன் மூலம் பணத் தட்டுப்பாடு குறையலாம். பேச்சில் கடுமையை காட்டாமல் இருப்பது நன்மை தரும். முன்கோபத்தை குறைப்பது நன்மையை தரும். கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது வேலையை கண்டு மற்றவர்கள் பொறாமைப்படுவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 9, 3

தனுசு
இன்று பொருளாதார நிலை சுமாராக இருக்கும். சகோதர சகோதரிகள் யாரேனும் ஒருவர் உங்களுக்கு பிடித்தமான ஒன்றை பரிசாக அளிப்பார்கள். உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி புரியும் இடங்களில் எச்சரிக்கையுடன்  இருப்பது நல்லது. குறிப்பாக எந்திரங்களை இயக்கும் போது கவனம் தேவை. மேலிடத்தின் மூலமாக நடக்க வேண்டிய காரியங்களில் தாமதம் ஏற்படலாம். மனதில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்:  4, 6

மகரம்
இன்று ஓரளவு முன்னேற்றமான நாள். உற்றார், உறவினர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். மேலிடத்தில் நற்பெயர் கிடைக்கும். கால்நடைகள் அபிவிருத்தி அடையும். புதிய நிலம் வாங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் பிரச்சினைகள் இருந்தால் அனைவருடனும் அமர்ந்து பேசி நல்வழியில் தீர்வு எடுங்கள். அது உங்கள் எதிர்காலத்திற்கு உதவும். முன் கோபம் ஏற்பட்டு அதனால் வீண் தகராறு ஏற்படலாம். நிதானமாக செயல்படுவது நல்லது.  நீண்ட நாட்களாக இருந்து வந்த இறுக்கமான நிலை மாறும். மேலிடத்திற்கும் உங்களுக்கும் கருத்து வேற்றுமை உண்டாகலாம் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6

கும்பம்
இன்று வியாபாரிகள் புது வாடிக்கையாளர்களை நம்பி கடன் கொடுக்க வேண்டாம். ஏனெனில் வசூலாவதில் சிக்கல்கள் ஏற்படக் கூடும். மற்றபடி பிரச்சினைகள் ஏதும் வராது.  பண விஷயத்தில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் இருந்த முட்டு கட்டைகள் நீங்கும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரலாம். பணவரத்து திருப்தி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து  செல்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 3, 7

மீனம்
இன்று சுபவிரயங்கள் உண்டாகலாம். தங்களுக்கு சம்மந்தமான விஷயங்களைத் தவிர மற்ற விஷயங்களில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டாம். எதிலும் சற்று நிதானத்துடன் நடந்து கொள்ள நன்மை நடக்கும். குழந்தைகளின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள்.  சாதூரியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் தேடி வரலாம்.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் கூடும். உங்களது நடவடிக்கைகள் மேலிடத்திற்கு திருப்தியை தரும். உடல் ஆரோக்கியம் பெறும். கடன் பிரச்சனை தீரும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை
அதிர்ஷ்ட எண்: 1, 7