ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தினசரி ஜாதகம்
Written By

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (07-07-2019)!

மேஷம்
 
இன்று உங்கள் காரியங்களும் முயற்சிகளும் தங்குதடையின்றி நடைபெறும். நீண்டகால திட்டங்கள் நிறைவேறும். கணவன் அல்லது  மனைவியின் உடல்நிலையில் சுகமும் முன்னேற்றமும் உண்டாகும். குடும்பத்தில் அன்யோன்யமும் ஒற்றுமையும் ஏற்படும்.  ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து அனுசரித்துப்போவார்கள்.
 
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9
ரிஷபம்
 
இன்று பிரச்சனைகள் ஒருபுறம் கவலையை உருவாக்கினாலும் அதற்குண்டான தீர்வுகளும் கிடைக்கும். வைத்தியச் செலவு இருக்காது. சேமிப்பு  இல்லாவிட்டாலும் கடன் அடைபடுகிறதே என்று ஆறுதல் அடையலாம். புதிய முயற்சிகளைத் தள்ளிப்போடவும். செய்த முயற்சிகளைத்  தொடரவும்.
 
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9
 
மிதுனம்
 
இன்று உடல்நலம் சீராகும். இதுவரை நோய்களினால் அவதிப்பட்டவர்களுக்கு, நோயின் தாக்கம் முழுமையாகக் குறையும். பூரண குணம்  ஏற்படும். அதனால் வைத்தியச் செலவுகளும் விலகும். தொழில்துறையில் போட்டியாளர்கள் காணாமல் போவார்கள். தொழிலை லாபகரமாக  நடத்தலாம். கடன்களையும் அடைக்கலாம். சிறிது சிறிதாக சேமிக்கலாம்.
 
அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பிரவுண்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6
 
கடகம்
 
இன்று தேவையற்ற விவகாரங்களை அடியோடு விலக்குவது நல்லது. குடும்பத்தில் அமைதியும் ஆனந்தமும் உண்டாகும். குடும்பத்தினர்  வேண்டுவதை நிறைவேற்றி வைப்பீர்கள். அதனால் உங்கள் மரியாதை உயரும். பழைய கடன்களை அடைத்து, வாக்கு நாணயத்தைக்  காப்பாற்றி, புதிய கடன்களை வாங்கி தொழிலைப் பெருக்கலாம். தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம்.
 
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெளிர் பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 7
 
சிம்மம்
 
இன்று உறவினர்கள் வகையில் தவிர்க்கமுடியாத சுபச் செலவுகளை சுமக்க நேரும். முக்கியமான பயணமும், முக்கிய பிரமுகர்களின் சந்திப்பும்  உண்டாகும். அது உங்கள் எதிர்காலத்துக்கு நல்ல அஸ்திவாரமாக இருக்கும். சிலர் கூட்டு முயற்சிகளில் லாபம் தேடலாம். சிலர்  குடும்பத்தினரோடு கூட்டுச் சேர்ந்து தொழில் செய்து லாபம் பார்க்கலாம்.
 
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9
 
கன்னி
 
இன்று ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.  தொழில், வேலை, உத்தியோகம் ஆகியவற்றில் வெற்றி அடையலாம்.  சேமிப்பும் அடையலாம்.  உங்கள் உழைப்பும் நம்பிக்கையும் உங்களுக்கு முழுமையான பலனையும் திருப்தியையும் தரும். எதிர்ப்பும் இடையூறும் ஒருபுறம் இருந்தாலும்,  உங்களின் தன்னம்பிக்கையாலும் தைரியத்தாலும் அவற்றைப் போராடி எதிர்த்துநின்று வெற்றிகொள்வீர்கள்.
 
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9
 
துலாம்
 
இன்று கடமைகளைக் காப்பாற்றுவீர்கள். பொருளாதாரத்தில் பிரச்சினை இருக்காது என்றாலும், வைத்தியச் செலவும் அல்லது வீண்விரயச்  செலவும் தவிர்க்க முடியாததாக இருக்கும். அதனால் சிலசமயம் விரக்தி ஏற்படலாம்.  ஜாதக தசாபுக்தியை அனுசரித்து தேவையான  பரிகாரங்களைச் செய்து கொள்வதால், மனதில் ஆறுதலும் நம்பிக்கையும் உண்டாகும். தொழில், வியாபாரம், உத்தியோகத்தில் பிரச்சனை  இருக்காது.
 
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 7
 
விருச்சிகம்
 
இன்று கடந்தகாலத்தில் உங்களை விட்டுச் சென்றவர்கள் விரும்பிவந்து சேரும் நாள். உறவு பலப்படும். தொலைபேசித் தொடர்பு மூலமாக  சிலர் புதிய தொழில் ஒப்பந்தங்களை ஏற்படுத்தி லாபம் தேடும் முயற்சியில் ஈடுபடலாம். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது.  சுபநிகழ்ச்சிகள் இடம்பெறும்.
 
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9
 
தனுசு
 
இன்று சில அத்தியாவசிய தேவைகளுக்கு செலவு செய்ய பணப்பற்றாக் குறையை சந்திக்கலாம். ஒரு பிரச்சினை முடிந்ததும் இன்னொரு  பிரச்சினை உருவாகலாம். ஆனாலும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் பிரச்சினைகள் எவ்வளவு இருந்தாலும் தோல்வியும் தொய்வும்  இல்லாமல் சமாளித்து ஜெயிக்கலாம்.
 
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7
 
மகரம்
 
இன்று எடுத்த காரியங்களில் உடனே வெற்றி ஏற்படும். சில காரியங்களில் தாமதமாக வெற்றி ஏற்படும். உங்கள் விடாமுயற்சிதான்  உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். பழகும் நண்பர்களை எடைபோட முடியாது. வெளுத்தது எல்லாம் பால் என்று நம்பும் உங்கள்  பெருந்தன்மையை கொஞ்சம் ஒதுக்கி வைக்கவும்.
 
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3
 
கும்பம்
 
இன்று சில காரியங்கள் எதிர்மறையாக நடக்கும். பொதுவில் நீங்கள் இதுவரை எதிர்பார்த்த காரியங்கள் எல்லாம் இழுபறியாக நிறைவேறாமல்  இருந்தாலும், ஏதோவொரு வகையில் எப்படியும் நடந்துவிடும் என்று நம்பிக்கை இருக்கும்.
 
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 6
 
மீனம்
 
இன்று பழகும் மனிதர்களின் வார்த்தைகளை நம்புவதா வேண்டாமா என்று சமயத்தில் சந்தேகம் ஏற்படலாம். வாழ்க்கையில் பிடிப்பும் ஆர்வமும் இல்லாமல் சலிப்பை உண்டாக்கினாலும், பாதிப்பை உண்டாகாமல் காப்பாற்றப்ப்டுவீர்கள். இனிப்பும் கசப்பும் மாறிமாறி இன்றைய  பலன்கள் இருக்கும்.
 
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9.