இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (25-11-2018)!

ஞாயிறு, 25 நவம்பர் 2018 (05:00 IST)

இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான் நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.

மேஷம்:
இன்று தொழிலை விரிவுபடுத்துவீர்கள். வருமானத்தை அதிகரித்துக் கொள்ள நல்ல சந்தர்ப்பம் வரும். வியாபார பேரங்கள் செய்யும் போது எதிர்ப்புகள் கூடும். எச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்கள். பேச்சில் நிதானத்தையும் வரம்பையும் கடைப்பிடியுங்கள். பெண்களுக்கு குடும்பச் செலவுகளுக்கு பணம் கிடைப்பது சிரமமாகும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

ரிஷபம்:
இன்று ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் முதலீடுகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். வங்கிக் கடன் முதலீடு கணக்கை பெறும்போது சற்று தாமதப்படுத்தி பெறுதலே நல்லது. வாகன விபத்துக்கள், தீக்காயங்கள் ஆகியவை ஏற்படக்கூடும்; எச்சரிக்கை. பங்கு வர்த்தகத்தில் ஈடுபடும் முன் தகுந்த ஆலோசனை அவசியமாகிறது.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

மிதுனம்:
இன்று யாருக்கும் ஜாமீன் கையெழுத்திடுவது போன்ற பொறுப்புகளை ஏற்க வேண்டாம். நண்பர்களால் இடையூறு ஏற்படும். அதிகாரிகளின் கெடுபிடிக்கும் வேலை பளுவிற்கும் இடையே அலுவலர்கள் சிரமப்பட வேண்டியிருக்கும். எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். பெற்றோர் உடல் நலத்தில் கவனம் கொள்ளுங்கள். தொழில்களை விரிவுபடுத்துவதை சற்று தள்ளிப் போடவும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

கடகம்:
இன்று தாய்வழி உறவுகளின் மூலம் லாபம் உண்டு. புதிய மணப்பெண்களுக்கு தாய்மைப் பேறு ஏற்படும். அயல்நாட்டு செல்லும் முயற்சிகளில் ஈடுபடுவோர் முன்பணம் தந்து ஏமாற வேண்டாம். வியாபாரிகளுக்கு லாபகரமான பொருட்களில் முதலீடு கூடும். ஆடம்பரப் பொருட்களில் முதலீடுகளை குறைக்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

சிம்மம்:
இன்று தொழிற்சாலைகளில் முதியோரால் பிரச்னைகள் ஏற்படும்; கவனமாக இருங்கள். பயணங்களின்போது விபத்து, காயம் என்று ஏற்படலாம். எச்சரிக்கை தேவை. ஒவ்வாமை, விஷ உணவு சேர்தல் (Food poison) போன்ற தொந்தரவுகள் ஏற்படும். உணவில் மிகுந்த கட்டுப்பாடு தேவை. சமையலறை பொருட்களை சுகாதாரமாகக் கையாள வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

கன்னி:
இன்று கல்வியில் முன்னேற்றம். நீண்ட பயணங்கள், விரய செலவுகள், எச்சரிக்கையற்ற முன்கோபத்தால் மனஸ்தாபங்கள் இவற்றை தவிர்க்க அரும்பாடு பட வேண்டி இருக்கும். நினைத்ததை சாதிக்க கடுமையாக உழைப்பீர்கள். வாடிக்கையாளர் வெறுப்புகளால் வியாபாரத்தடை ஏற்படும். எச்சரிக்கையுடன் பணிபுரியுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

துலாம்:
இன்று செலவுகளை திட்டமிட்டு செய்வது நல்லது. புதிய காரியங்களை செய்ய துவங்குவதற்கு முன் நல்ல நேரம் காலம் பார்த்து செய்வது நல்லது. வேலையில் இருந்த பளு கொஞ்ச கொஞ்சமாகக் குறையும். அதில் இருந்து வந்த சுணக்க நிலையும் மாறும். வெளிநாட்டு வேலை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

விருச்சிகம்:
இன்று குடும்பத்தில் சுபிட்சம் நிலவும். குழந்தை பாக்கியம் கிட்டும். கர்ப்பிணிகள் கவனமாக இருப்பது அவசியம். பொதுவாக நினைத்த காரியங்களை அதன்  கஷ்டங்களுடன் எளிமையாக எதிர்கொள்வதும்  வீண் செலவுகளை குறைப்பதும் கடுமையான வார்த்தைகளை உபயோகிக்காதிருப்பதும் நன்மையைத் தரும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7
 
தனுசு:
இன்று உடன்பணிபுரிபவர்களை மதித்து நடந்து கொள்வது மிக அவசியம்.. சீக்கிரமாக மக்கும் அல்லது அழியும் பொருட்களை வியாபாரம் செய்வது நல்ல லாபத்தை தரும். தம்பதியர் அன்னியோன்யம் அதிகரிக்கும். உறவினர்களின் வீட்டு விசேஷங்களில் குதூகலமாக கலந்து கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

மகரம்:
இன்று கட்டுமானப் பணிகள், ரியல் எஸ்டேட் இவற்றில் முழு முதலீடு செய்ய அதிர்ஷ்டமான நாள். மிகுந்த துணிச்சலுடன் பெரிய கம்பெனிகளை ஆரம்பித்து வெற்றி பெறலாம். அரசாங்க வேலைகளுக்கு ஒப்பந்தங்கள் செய்து கொள்ளலாம். அலுவலகப் பெண்கள் ஆற்றலை காட்ட நல்ல சந்தர்ப்பம் இது.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

கும்பம்:
இன்று பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். அதிகமான தர்ம விஷயங்களில் ஈடுபடுவீர்கள். அதிகாரப் பதவிகள் கிட்டும். வழக்குகளில் நல்ல வெற்றியை எதிர்பார்ப்பதுடன் எதிரிகள் வீழ்ச்சியையும் காணலாம். பைனான்ஸ் தொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு மிகுந்த லாபம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

மீனம்:
இன்று கொஞ்சம் சோதனையான நாள். குடும்பத்தில் கடன் சுமை அதிகமாகும். எது நடந்தாலும் பொறுமையுடன் கஷ்டங்களை எதிர்கொள்ளுங்கள். வெற்றியை எதிர்பார்க்கலாம். வாய்ப்புகள் கிட்டும். குடும்பங்களில் பணத் தேவைகள் முழுவதும் பூர்த்தியாகும். பெரிய மனிதர்களின் தொடர்புகளால் வியாபாரம், தொழிற்சாலைகளில் நீடித்த அபிவிருத்தி ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7


வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
இதில் மேலும் படிக்கவும் :