இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (22-11-2018)!

வியாழன், 22 நவம்பர் 2018 (05:00 IST)

இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான் நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.

மேஷம்:
இன்று பிள்ளைகளால் பெருமை. குடும்பத்தை கவனிப்பதில் அக்கறை வளரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான மாற்றம் ஏற்படும். பணப் பற்றாக்குறை நீங்கும். பெரிய மனிதர்களின் தொடர்புகள் முன்னேற்றத்திற்கு கைகொடுக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9
 
ரிஷபம்:
இன்று முக்கிய பொறுப்புகள் ஏற்க வேண்டி வரும். தொல்லை கொடுத்து வந்த அதிகாரிகளிடமிருந்து விடுதலை கிடைக்கும். ஏற்றுமதி ஆர்டர்கள் கிடைக்கப் பெறுவதால், நலிவடைந்த தொழில்கள் முன்னேற்றம் அடையும். பிள்ளைகள் திருமணம் மகிழ்ச்சி பொங்க நடைபெறும். கைவிட்டுப் போன பொருட்கள், சொத்துகள், சொந்தங்கள் ஆகியவை மீளும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9
 
மிதுனம்:
இன்று புத்திர பாக்கியம் ஏற்படும். சொத்துகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணைக்கான மருத்துவச் செலவுகள் குறைய ஆரம்பிக்கும். உத்தியோகஸ்தர்கள் நெருக்கடியிலிருந்து விடுபடுவர். அலுவலகப் பெண்கள் அழகான வாகனங்களைப் பெறுவார்கள். வியாபாரிகள் தங்கள் பொருட்களை கவனமாக பாதுகாக்கவும். திருடுபோகும் வாய்ப்பு அதிகம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9
 
கடகம்:
இன்று வெளியிடங்களில் அவமானம் அடைய நேரிடும். கூடுதல் லாபங்களுக்கு ஆசைப்பட்டு தொழிலில் போட்ட முதலை இழந்து விடாதீர்கள். கூட்டுத் தொழில் புரிவோர் அமைதியாகப் பேசி கருத்து வேறுபாடுகளை அகற்றிக் கொள்ளுங்கள். தடைபட்டிருந்த நிச்சயித்த திருமணங்கள் நிறைவேறும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9
 
சிம்மம்:
இன்று தனியான பிரயாணங்களை தவிர்த்து விடுங்கள். குடும்பப் பெண்கள் மிகவும் எச்சரிக்கையாக நடந்துகொள்ள வேண்டிய காலம். வீட்டில் அந்நிய நபர்களை சேர்ப்பதற்கு முன் ஆலோசிக்கவும். முடிந்தவரை வாழ்க்கைத் துணையுடன் அனைத்து பிரயாணங்களிலும் செல்லவும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7
 
கன்னி:
இன்று குலதெய்வம் எனக்கு என்ன செய்தது என்று அவ்வப்போது வெறுக்கத் தோன்றும். வீட்டிலுள்ள அம்மன் படங்களை வெளியேற்ற முயற்சிப்பீர்கள். காலம் தரும் சோதனையை ஏற்றுக்கொள்ள பழகுதல் நல்லது. ஞானிகளின் மேல் ஏற்படும் கரிசனத்தால் போலி வேடதாரிகளிடம் ஏமாறும் வாய்ப்பும் உண்டு.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5
 
துலாம்:
இன்று அரசு வழி உதவிகள் கிடைக்கும். மேன்மை பெறுவர். தடைபட்ட திருமணங்களை இந்த காலத்தில் நிறைவேற்ற உற்சாக வழி பிறக்கும். கொஞ்சம் பொறுமை காக்கவும். விரயச் செலவுகளை தவிர்க்க மாடிகளை கட்டுவதோ வீட்டின் உட்புறங்களை அழகுபடுத்துவதோ நல்லது. அளவான உணவும் எண்ணெய் பதார்த்தங்களை குறைப்பதும் நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9
 
விருச்சிகம்:
இன்று உணவு விஷயங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை. கடுமையான பண நெருக்கடி ஏற்படலாம். செயல்கள் அனைத்தையும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது குடும்ப மானத்தை காப்பாற்றும். பெற்றோர்கள் கண்டிப்பாக பிள்ளைகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 4, 6
 
தனுசு:
இன்று பற்களில் அதிக தொந்தரவு ஏற்படும். மருத்துவச் செலவு தவிர்க்க முடியாதவை. பண நஷ்டங்கள் தவிர்க்க இயலாதவை. தடைபட்ட திருமணங்களை இப்பொழுது நிகழ்த்தலாம். தோற்றத்தில் கம்பீரம் ஏற்படும். பிள்ளைகளால் தொழில் வழி லாபம் ஏற்படும். நீண்ட பேரங்கள் இப்போது படியும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5
 
மகரம்:
இன்று நலிவடைந்த தொழிற்சாலைகளை ஏற்று நடத்தும் முயற்சிகள் கைகூடும். வியாபாரிகள் அயலார் பொருட்களில் ஆசைப்படும் நிலை தோன்றும். அக்னி பயம், பாம்பு பயம் இரண்டும் ஏற்படும். சிவபக்தி கைகொடுக்கும். பிள்ளைகளின் பள்ளியில் பெறும் பரிசுகளும் வீட்டு உபயோக பொருட்கள் அதிகரிப்பதும் வெளிநாட்டு கடிதத்  தொடர்புகள் கணிச லாபம் தருவதும் குடும்பத்தில் மகிழ்ச்சியை கூட்டும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6
 
கும்பம்:
இன்று அதிக சம்பளம், சலுகையோடு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். ஏளனமாக பேசியவர்கள் எல்லாம் இனி உங்களை பாராட்டுவார்கள். அரசு சம்பந்தப்பட்ட வேலைகள் விரைந்து முடியும். வெகுநாள் கனவான புதிய நிலம், வீடு வாங்குவீர்கள். பூர்வீகச் சொத்தை சீரமைப்பீர்கள். தாய்வழியில் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். எதிர்பார்த்து காத்திருந்த வெளிநாடு பயணம் சாதகமாக அமையும். 
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6    
 
மீனம்:
இன்று சுபச் செலவுகள் அதிகரிக்கும். சகோதர, சகோதரிகளால் அவ்வப்போது அலைச்சலும், டென்ஷனும் இருக்கும். அவர்களால் ஆதாயமும் உண்டு. வழக்கில் அவசர முடிவுகள் வேண்டாம். மறைமுக எதிர்ப்புகள் விலகும். குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். சொத்துப் பிரச்னை தீரும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9


வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
இதில் மேலும் படிக்கவும் :