Widgets Magazine

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (08-09-2018)!

சனி, 8 செப்டம்பர் 2018 (05:05 IST)

இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான் நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.
Daily Astrology


மேஷம்:
இன்று உங்களது முயற்சிகளுக்கு இருந்த முட்டுகட்டைகள் அகலும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். செல்வம் புரளும். எதிர்காலம் பற்றிய பயம் நீங்கும். எதிர்காலம் பற்றிய திட்டம் தோன்றும். பெற்றோர்களின் உதவி கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, வெளிர் மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7, 9
 
ரிஷபம்:
இன்று கடன் பிரச்சனை குறையும். வீண் அலைச்சல் மனோபயம் குறையும். குடும்பத்தில் வாக்குவாதம் ஏற்படும். மற்றவர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும். நண்பர்களிடம் பகை ஏற்படலாம். பிடிவாதத்தை விட்டு விடுவது  காரிய வெற்றிக்கு உதவும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பிரவுண்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9
 
மிதுனம்:
இன்று வீண் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக நேரிடலாம். எதிலும் திருப்தி இல்லாத மனநிலை இருக்கும். பயணம் மூலம் சாதகம் கிடைக்கும். கடித போக்குவரத்து நன்மை தரும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9
 
கடகம்:
இன்று தொழில் வியாபாரம் தொடர்பான நெருக்கடிகளை சந்திக்க வேண்டி வரும். புதுவியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் சுமையாக வரும். நிதானம் தேவை. சக ஊழியர்களுடன்  சாமர்த்தியமாக பழகி காரிய அனுகூலம் அடைவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9
 
சிம்மம்:
இன்று குடும்ப விவகாரங்களில் சாமர்த்தியமாக நடந்து கொண்டு எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே  மனம்விட்டு பேசுவது கருத்து வேற்றுமை  ஏற்படாமல் தடுக்கும். பிள்ளைகளிடம் கோபமாக பேசாமல் அன்பாக பேசுவது நல்லது. வாகன வசதி உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 5, 6
 
கன்னி:
இன்று அடுத்தவர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். நீண்ட தூர தகவல்கள் நல்லவையாக இருக்கும். எதிலும் நிதானம் தேவை. அடுத்தவர்களால் ஏற்படும் கெடுதல்கள் நீங்கும். மனதில் அமைதி பிறக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7
 
துலாம்:
இன்று பணவரத்து தடைபடும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம் கவனம் தேவை.  கெட்ட கனவுகள் வரும். அதிக கோபத்தால் வீண்பகை உண்டாகலாம்.  அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி செல்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, பச்ச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9
 
விருச்சிகம்:
இன்று ஆடம்பர செலவுகள் ஏற்படும். வாகனம் மூலம் செலவு உண்டாகலாம். பயணசுகம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் கூடுதல் செலவை சந்திக்க நேரிடும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதப் படும்.
அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9
 
தனுசு:
இன்று தேவையான பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணி காரணமாக உடல்சோர்வு உண்டாகலாம். சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 5, 7
 
மகரம்:
இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் சொல்வதை சாதாரணமாக எடுத்துக் கொள்வது நல்லது. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் மனஅமைதி கிடைக்கும். பிள்ளை கள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். அவர்கள் எதிர்காலம் பற்றிய சிந்தனை எழும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7
 
கும்பம்:
இன்று கோபத்தை குறைத்து நிதானமாக பேசுவது பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. செலவுகள் கூடும். வீட்டைவிட்டு வெளியே தங்க நேரிடும். தேவையில்லாத வீண் செலவுகள் உண்டாகும். தந்தையின் உடல் நலத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3
 
மீனம்:
இன்று நண்பர்கள், உறவினர்களுடன் வீண்பகை உண்டாகலாம் கவனமாக பேசுவது நல்லது. காய்ச்சல், சிரங்கு போன்ற நோய்கள் உண்டாகலாம்.  பணவரத்து அதிகரிக்கும். காரியங்கள் தாமதமாக நடந்தாலும் வெற்றிகரமாக நடக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9


வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்




இதில் மேலும் படிக்கவும் :