தினகரனின் ஸ்லீப்பர் செல் அமைச்சர்கள் ஆறு பேர் யார் யார்?


sivalingam| Last Modified புதன், 27 செப்டம்பர் 2017 (06:22 IST)
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியிலேயே தினகரனின் ஸ்லீப்பர் செல்கள் இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது அந்த ஸ்லீப்பர் செல்களின் பெயர்கள் ஒவ்வொன்றாக வெளியே தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.


 
 
குறிப்பாக திண்டுக்கல் சீனிவாசன், கேசி வீரமணி ஆகியோர் ஜெயலலிதாவை அப்பல்லோ மருத்துவமனையில் பார்க்கவே இல்லை என்று கூறிய நிலையில் ஒரு அமைச்சர் மட்டும் ஜெயலலிதாவை பார்த்தேன்  என்று கூறியதில் இருந்தே அவர் ஸ்லீப்பர் செல்லாக இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
 
அதேபோல் இன்னொரு அமைச்சர் சமீபத்தில் சசிகலா மற்றும் தினகரன் எதிர்ப்பு அரசியல் நடத்த வேண்டாம் என்று முதல்வரிடமே கோரிக்கை வைத்தாராம். சசிகலா சிறையில், நடராஜன் மருத்துவமனையில் இருக்கும் இந்த நிலையில் சசிகலா எதிர்ப்பு அரசியல் தேவையில்லை என்பதுதான் மேலும் ஐந்து அமைச்சர்களின் கருத்தாம். இவர்களும் ஸ்லீப்பர் செல்லாக இருக்கக்கூடுமோ என்ற சந்தேகம் எடப்பாடி அணியினர்களுக்கு ஏற்பட்டுள்ளதாக அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன


இதில் மேலும் படிக்கவும் :