1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By sivalngam
Last Modified: வெள்ளி, 15 செப்டம்பர் 2017 (05:38 IST)

தினகரனின் திருச்சி கூட்டத்தை தடுக்க இடிப்பு வேலை செய்யும் தமிழக அரசு

திருச்சி உழவர் சந்தையில் கடந்த வாரம் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கண்டனக்கூட்டம் ஒன்றை நடத்தியது. அதற்கு மறுநாள் அதே இடத்தில் பாஜக நீட் தேர்வுக்கு ஆதரவான கூட்டம் ஒன்றை நடத்தியது.



 
 
இந்த நிலையில் மீண்டும் அதே இடத்தில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தினகரன் அணி கூட்டம் நடத்த திட்டமிட்டு திருச்சி மாநகராட்சி நிர்வாகத்திடம் அனுமதி கேட்டனர்.
 
திமுக, பாஜகவுக்கு அனுமதி கொடுத்த நிர்வாகம் தினகரன் அணிக்கு அனுமதி கொடுக்க மறுத்தது. உழவர் சந்தை அரங்கை மறுசீரமைப்பு செய்வதாக கூறி அனுமதி மறுத்ததோடு, அரங்கை இடிக்கும் பணியையும் தொடங்கியது.
 
இந்த நிலையில் இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு சென்றுள்ள நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. தினகரனின் திருச்சி கூட்டம் நடப்பது தற்போது நீதிமன்றத்தின் கையில் தான் உள்ளது.