வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 9 அக்டோபர் 2017 (11:54 IST)

நான் ஸ்லீப்பர் செல் இல்லை; கதறிய செல்லூர் ராஜூ

அதிமுக ஆட்சி அமைய பாடுபட்டவர் சசிகலாதான் எனக் கூறிய செல்லூர் ராஜூ நான் ஸ்லீப்பர் செல் இல்லை என்று கூறியுள்ளார்.


 

 
நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட செல்லூர் ராஜூ அதிமுக ஆட்சி அமைய பாடுபட்டவர் சசிகலாதான் என கூறினார். இவரது இந்த பேச்சு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து பேசிய சி.ஆர்.சரஸ்வதி, தினகரன் சொன்னபடி ஸ்லீப்பர் செல்கள் இருப்பது உண்மை. அவர்கள் வெளியே வருவார்கள் என்றார்.
 
இந்நிலையில் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜூ தான் ஸ்லீப்பர் செல் இல்லை என கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
அதிமுக ஆட்சி அமைய சசிகலா உதவினார் என என்னுடைய மனசாட்சிபடி கூறினேன். அதுவும் தனிப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட போது கேட்டக்கப்பட்ட கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தேன். அதை இவர்கள் அரசியல் ஆக்கிவிட்டார்கள். ஓபிஎஸ் மற்றும் பழனிச்சாமி அவர்களின் தலைமையில் ஆட்சி நடக்க என்றும் துணையாய் நிற்பேன் என்றார்.