வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Updated : திங்கள், 9 அக்டோபர் 2017 (08:16 IST)

ஒவ்வொரு ஸ்லீப்பர்செல்லும் வெளியே வருவார்கள்: சிஆர்.சரஸ்வதி

சசிகலா பரோலில் வந்தால் தமிழக அரசியலில் பெரும் மாற்றம் ஏற்படும் என்று ஏற்கனவே ஊகித்த நிலையில் அவரது முகத்தை டிவியில் பார்த்ததே ஒரு ஸ்லீப்பர்செல் வெளியே வந்துவிட்டதாகவும் இன்னும் படிப்படியாக ஒவ்வொரு ஸ்லீப்பர்செல்லும் வெளியே வருவார்கள் என்றும் அதிமுக பேச்சாளர் சி.கே.சரஸ்வதி கூறியுள்ளார்



 
 
நேற்று அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறியபோது, 'இந்த அரசு அமைவதற்கு முக்கிய காரணம் சசிகலா என்பது உண்மை என்று கூறிய அவர் ஆட்சிக்கு எந்தவித ஆபத்தும் நேர்ந்துவிட கூடாது என்பதற்காக ஓபிஎஸ்,ஈபிஎஸ் அவர்களுக்கு ஆதரவு அளித்து வருவதாக கூறினார்
 
இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த சி.ஆர்.சரஸ்வதி, 'மனசாட்சியுடன் இருப்பதால் அமைச்சர் செல்லூர் ராஜூ உண்மையை ஒப்புக்கொண்டிருப்பதாகவும், இவரை போலவே மனசாட்சி இருப்பவர்கள் ஒவ்வொருவராக வெளியே வருவார்கள் என்றும் கூறியுள்ளார்.
 
ஆனால் சசிகலா பரோல் முடிந்து மீண்டும் சிறைக்கு சென்றவுடன் நிலைமை மாறிவிடும் என்றும் ஆட்சிக்கு எந்தவித ஆபத்தும் நேர வாய்ப்பில்லை என்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்