வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. 2015- கண்ணோட்டம்
Written By Caston
Last Updated : புதன், 30 டிசம்பர் 2015 (12:13 IST)

சார்லி ஹெப்டோ பத்திரிக்கை அலுவலகம் தாக்குதல்

2015 ஆம் ஆண்டு தொடங்கி ஒரே வாரத்தில் அதாவது ஜனவரி 7 ஆம் தேதி 10:30 மணியளவில் சார்லி ஹெப்டோ துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது. 2015-ல் நடந்த முதல் தீவிரவாத தாக்குதல் இது எனலாம்.


 
 
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அமைந்துள்ள சார்லி ஹெப்டோ பத்திரிக்கையின் தலைமையகத்தின் மீது முகமூடி அணிந்த மூன்று தீவிரவாதிகளால் நடத்தப்பாட்ட துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் மரணமடைந்தனர். 11 பேர் காயமடைந்தனர்.
 
சார்லி ஹெப்டோ பத்திரிக்கை 2011 ஆம் ஆண்டு இஸ்லாமிய இறைத்தூதர் முகமது நபி தொடர்பான கேலிச்சித்திரம் ஒன்றை வெளியிட்டதற்காக இந்த தாக்குதலை தீவிரவாதிகள் நிகழ்த்தினர்.
 
சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அல்-கொய்தா அமைப்பின் ஏமன் நாட்டுக் கிளை பொறுப்பேற்றது. அல்-கொய்தா ஏமன் கிளையின் முக்கிய தளபதியான நாசர் அல் அன்சாய் இறைதூதரை இழிவுபடுத்தியதற்கு பழிக்குப்பழியாக சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என காணொளி மூலம் இத்தகவலை உறுதிப்படுத்தினார்.