திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Murugan
Last Modified: சனி, 4 நவம்பர் 2017 (16:08 IST)

முன்னாள் முதல்வர் மதுசூதனன் - உளறிக்கொட்டிய செல்லூர் ராஜூ

அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ பல இடங்களில் என்ன பேசுகிறோம் என்கிற நினைப்பில்லாமல் பேசி வருவது தொடர்ந்து கேலிக்கு உள்ளாகி வருகிறது.


 

 
ஜெ.வின் மறைவிற்கு பின் அதிமுக அமைச்சர்கள் கட்டுப்பாடு இல்லாமல் மனதில் தோன்றியதையெல்லாம் பேசி சர்ச்சையில் சிக்கி வருவது தொடர் கதையாகிவிட்டது. இதை முதலில் ஆரம்பித்தவர் செல்லூர் ராஜூ. அதன் பின் திண்டுக்கல் சீனிவாசன், வேலுமணி என நீண்டது.
 
வைகை ஆற்றில் நீர் ஆவியாவதை தடுக்க தெர்மாக்கோல் பயன்படுத்தி உலகத்தையே சிரிக்க வைத்தார் செல்லூர் ராஜூ. அதன் பின் டெங்கு காய்ச்சலால் யாரும் இறக்கவில்லை என கூச்சப்படாமல் பேசினார். ஜெ. மருத்துவமனையில் இருந்து போது நாங்கள் யாரும் பார்க்கவே இல்லை என ஒருபுறம் திண்டுக்கல் சீனிவாசன் கூற, செல்லூர் ராஜூவோ நாங்கள் அனைவரும் பார்த்தோம் எனக் கூறினார். அதன், இந்த ஆட்சியை அமைத்தது சசிகலாதான் எனப் பேசி எடப்பாடி பழனிச்சாமியிடம் வாங்கிக் கட்டிக்கொண்டார். அதன் பின் பத்திரிக்கையாளர்களைக் கண்டாலே தெறித்து ஓடினார். 
 
இந்நிலையில், சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்த போது, முன்னாள் முதல்வர் மதுசூதனன் எனக் கூறி பலரையும் சிரிக்க வைத்துள்ளார். சமீபத்தில் ‘பிரதமர் மன்மோகன்சிங்’ எனக்கூறி திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.