1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: புதன், 1 நவம்பர் 2017 (11:53 IST)

வெள்ளத்தையும் தெர்மோகோல் வைத்து தடுப்பாரா அமைச்சர்? மு.க.ஸ்டாலின் கிண்டல்

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததன் காரணமாக தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வருவதால் பெரும்பாலான இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் ஒருசில ஏரிகள் உடைந்துள்ளதால் குடியிருப்புகள் தண்ணீர் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தியுள்ளது.



 
 
இந்த நிலையில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டிய தமிழக அரசு மெத்தனமாக இருப்பதாக திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். வைகை அணையின் நீர் ஆவியாகாமல் இருக்க தெர்மோகோல் வைத்தது போல் மழைவெள்ளத்தையும் தெர்மாகோல் மூலம் அமைச்சர் செல்லூர் ராஜூ தடுப்பாரோ என எண்ணத் தோன்றுவதாக கூறும் ஸ்டாலின், மழை பெய்யாத சேலம் மாவட்டத்தில் மழை குறித்த ஆலோசனையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நடத்தி வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
 
தமிழக அரசு சார்பில் தூர்வாரப்பட்ட ஏரி, குளங்கள் பற்றி வெள்ளை அறிக்கை விட தயாரா? என்று கேள்வி எழுப்பியுள்ள ஸ்டாலின் சரியான முறையில் தூர்வாரியிருந்தால் ஏன் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளநீர் வருகிறது என்று கூறியுள்ளார். ஸ்டாலின் கேள்விகளுக்கு அமைச்சர்களும், முதல்வரும் என்ன பதில் அளிக்கவுள்ளனர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்