பாலாவின் நான்காவது படம். பாலா படத்துக்கேயுரிய நுணுக்கம், ஆளுமை அனைத்தும் கூடி வந்திருக்கும் படம். காசி சாமியார்களின் வாழ்க்கையும், பிச்சையெடுப்பவர்களின் அவலத்தையும் பிரதிபலிக்கிறது நான் கடவுள். ருத்ரன் என்ற கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார் ஆர்யா. கண் தெரியாத பிச்சைக்காரர் வேடம் பூஜாவுக்கு. இவர்களைத் தவிர ஏராளமான அங்ககீனர்கள், மூளை வளர்ச்சி குறைந்தவர்கள் நடித்துள்ளனர். அகோரி என்ற நரமாமிசம் சாப்பிடும் சாமியாராக ஆர்யாவுக்கு வித்தியாசமான வேடம். இதற்காக மூன்று வருடங்கள் தாடி, மீசை வளர்த்து அந்த கேரக்டராகவே மாறியிருக்கிறார். காசி மற்றும் தேனிப் பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். மலைக்கோயில் ஒன்றை தத்ரூபமாக அமைத்துள்ளார், கலை இயக்குனர் பி. கிருஷ்ணமூர்த்தி. |