1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 26 ஜனவரி 2018 (09:42 IST)

நாயை கடித்து குதறிய இளைஞர்.... கைது செய்த போலீஸ்!

நாய் மனிதனை கடித்தது என செய்தி வருவ்து வழக்கமான ஒன்றுதான் ஆனால், அமெரிக்காவில் இளைஞர் ஒருவர் போலீஸ் நாயை கடித்துவைத்துள்ளார். இதனால் அவர் கைதும் செய்யப்பட்டுள்ளார்.
 
அமெரிக்காவில் உள்ள நியூகம்‌ஷயரை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தாங்கள் தங்கு இருந்த குடியிருப்பு பகுதியில் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதனை பற்றி விசாரிக்க போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். 
 
அப்போது இருவரும் தப்பி ஓடி அங்குள்ள வாகன ட்ரெய்லரில் வைக்கப்பட்டிருந்த துணி மூட்டைக்குள் பதுங்கி கொண்டனர். இதனால் போலீஸாரால் அவர்கள் எங்கு மறைந்திருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.
 
எனவே போலீஸ் மோப்பநாயை கொண்டு வந்து இரண்டு இளைஞர்களையும் தேட முயற்சித்தனர். அப்போது ஒரு நபரை நாய் கண்டுபிடித்துவிட்டது. இளைஞரை கடிக்க நாய் முயன்றுள்ளது. இதனால் கோபமடைந்த இணைஞர் அந்த நாயின் தலையை பிடித்து அதன் முகத்தை கடித்து குதறியுள்ளார். 
 
ஆனாலும் அந்த நாய் அவரை விடவில்லை. இறுதியில் அவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது நாயை கடித்ததாகவும், தப்பி ஓட முயற்சித்தற்காகவும் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.