செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 16 ஜூன் 2018 (11:53 IST)

உணவின்றி தவிக்கும் 80 லட்சம் பேர்: ஏமனில் பரிதாபம்!

ஏமன் நாட்டில் சன்னி பிரிவை சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவை சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சி படைக்கும் இடையே கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. 
 
அதிபர் மன்சூர் ஹைதிக்கு சவுதி அரேபியாவும் ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரானும் ஆதரவு அளிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கிளர்ச்சிப் படை கட்டுப்பாட்டில் உள்ள துறைமுகம் மற்றும் விமான நிலையத்தை குறிவைத்து அதிபரின் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். 
 
இந்த துறைமுகத்தின் மூலமாகதான் 80 சதவீத உணவுப் பொருட்கள், மருந்துகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. தற்போது நடந்து வரும் தாக்குதலால் இறக்குமதி பாதிக்கப்பட்டு கடும் உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 
 
உணவின்றி கடந்த 2 நாட்களில் மட்டும் 50 பேர் பலியாகி உள்ளனர். சுமார் 80 லட்சம் பேர் உணவின்றி தவிக்கின்றனர். இந்த நிலை நீடித்தால் சுமார் 25 ஆயிரம் பேர் பலியாகக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.