வியாழன், 26 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 10 நவம்பர் 2016 (11:56 IST)

டிரம்ப் வெற்றி: கருத்தை பதிவு செய்யும் உலகளாவிய நாடுகள்!!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கருத்துக்கணிப்புகளை எல்லாம் பொய்யாக்கி விட்டு, குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். 


 
 
இது குறித்து உலகில் உள்ள பிற நாடுகள், கருத்து தெரிவித்துள்ளனர்...
 
சீனா:
 
சீனா, மெக்சிகோ, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு வேலை வாய்ப்பை அமெரிக்க நிறுவனங்கள் வழங்குவதாக டிரம்ப், பிரசாரத்தின்போது விமர்சித்தார்.
 
ஆனால் இப்போது டிரம்ப் வெற்றி பெற்றிருப்பதை சீனா வரவேற்றுள்ளது. மேலும், அமெரிக்காவுடன் சீனா இணைந்து பணியாற்றும் எனவும் தெரிவித்துள்ளது.
 
இங்கிலாந்து:
 
இங்கிலாந்து பிரதமர், “அமெரிக்காவும், இங்கிலாந்தும் வர்த்தகம், ராணுவம் உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து நெருங்கிய தோழமை நாடுகளாக திகழும்” என்று குறிப்பிட்டு தனது வாழ்த்துகளை பதிவிட்டுள்ளார்.
 
ரஷியா:
 
ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், உலக விவகாரங்களில் அமெரிக்காவுடன் இணைந்து பாடுபட முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். அத்துடன் அவர் டிரம்புக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
 
ஜெர்மனி:
 
ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலின், “டிரம்பின் வெற்றி மிகுந்த அதிர்ச்சியை தருகிறது” என்று கூறினார். “இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் உலக உறவுகளை பராமரித்து வந்த அமெரிக்காவின் சமரசம் முடிவுக்கு வந்துவிட்டதா?” என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
 
பிரான்ஸ்:
 
பிரான்ஸ், அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட உறுதி அளித்துள்ளது. ஆனால், டிரம்பின் ஆளுமை, கேள்விகளை எழுப்புவதாக கருத்து தெரிவித்துள்ளது. 
 
சுவீடன்: 
 
சுவீடன் நாட்டின், முன்னாள் வெளியுறவு மந்திரி கேரல் பில்த், “இந்த ஆண்டு மேற்கத்திய நாடுகளுக்கு இரட்டைப் பேரழிவு ஏற்பட்டது போல தெரிகிறது” என்று குறிப்பிட்டார்.
 
இதே போல், மலேசியா, துருக்கி, பிலிப்பைன்ஸ், தென்கொரிய நாடுகளும் டிரம்ப் வெற்றிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.