செவ்வாய், 24 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 22 ஏப்ரல் 2018 (17:36 IST)

117 வயது உலகில் மிக வயதான பெண் மரணம்

ஜப்பான் நாட்டில் உள்ள ககோஷிமா என்ற பகுதியில் வாழ்ந்து கொண்டிருந்த உலகின் மிக வயதான பெண் என்ற பெருமையை பெற்ற நபி தஜிமா என்பவர் இன்று மரணம் அடைந்தர். இவர் கடந்த ஜனவரி மாதம் முதல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மரணம் அடைந்தார். 
 
1900ஆம் ஆண்டில் இவர் பிறந்ததால், 19ஆம் நூற்றாண்டின் கடைசி மனிதராக திகழ்ந்த இவருக்கு பேரக்குழந்தைகள் மட்டுமே 160 பேர் உள்ளனர்.
 
உலகின் வயதான பெண்ணான நபி தஜிமா மரணம் அடைந்ததை அடுத்து இந்த பெருமையை தற்போது அதே ஜப்பான் நாட்டை சேர்ந்த பெண்ணான சியோ மியாகோ என்பவர் உலகின் மிக வயது முதிர்ந்த பெண் என்ற இடத்தினை பிடித்துள்ளார். இவருக்கு 117 வயதை அடைய இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.