1,000 பேருடன் கடலில் மூழ்கிய ஜப்பானிய கப்பல்: 80 ஆண்டுகளுக்கு பின் கண்டெடுப்பு
கடந்த 1942 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பான் நாட்டைச் சேர்ந்த கப்பல் ஒன்று ஆயிரம் பேர்களுடன் சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென மூழ்கிய நிலையில் அந்த கப்பல் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஒரு கப்பல் போர்க்கைதிகளுடன் பயணம் செய்து கொண்டிருந்தபோது திடீரென அந்த கப்பல் மூழ்கியது. அதில் 850 போர் கைதிகள் மற்றும் கப்பல் ஊழியர்கள் 150 பேர் இருந்ததாக கூறப்படுகிறது.
ஜப்பானியர்கள் அந்த கப்பலை ஒட்டிக்கொண்டு வந்த போது அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பல் தாக்கியதால் அந்த கப்பல் முழுமையாக மூழ்கிய. இந்த நிலையில் 80 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அந்த கப்பல் இருக்கும் இடத்தை கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன கப்பலில் பயணம் செய்த ஆயிரம் பேரும் உயிரிழந்து விட்டனர் என்பதும் அவர்கள் அனைவரும் ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.
Edited by Mahendran