வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 28 ஜனவரி 2020 (16:46 IST)

கொரோனோவை கவனிக்க தவறிவிட்டோம் – உலக சுகாதார அமைப்பு மன்னிப்பு!

உலகையே அச்சுறுத்தும் பெரும் வைரஸாக கொரோனா வளர்ந்து வரும் நிலையில் அதை முறையாக கணிக்க தவறிவிட்டதாக உலக சுகாதார அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளது.

சீனாவின் வுகான் மாகாணத்தை மையமாக கொண்டு பரவ தொடங்கிய இந்த வைரஸ் கடந்த சில வாரங்களுக்குள் மிகவும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. ஆரம்பத்தில் நாளுக்கு 4 முதல் 8 வரை இருந்த இறப்பு எண்ணிக்கை தற்போது 40 முதல் 50 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் மட்டும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுதவிர உலகம் முழுவதும் மொத்தம் 17 நாடுகளில் கரோனா வைரஸ் பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பரவலை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுப்பது என தெரியாமல் உலக நாடுகள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளன. கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய சமயத்தில் இது மிதமான நிலையிலேயே உள்ளது என அறிவிப்பு வெளியிட்ட உலக சுகாதார அமைப்பு தற்போது வைரஸின் வீரியத்தை கவனிக்க தவறிவிட்டதாக தவறை ஒப்புக்கொண்டுள்ளது.