முதல்முறையாக உலக கொரோனா பாதிப்பு 5 கோடியை தாண்டியது: அமெரிக்காவில் மிக மோசம்
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண்களின் மொத்த எண்ணிக்கை 5.02 கோடியாக அதிகரித்துள்ளதால் முதல்முறையாக 5 கோடியை தாண்டிவிட்டது.
உலகம் முழுவதும் 50,254,287 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 1,256,114 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 35,546,047 பேர் மீண்டனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் 13,452,126 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10,182,818 என அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 243,257 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 6,441,744 என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அமெரிக்காவில் ஒரே நாளில் 1,19,348 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அங்கு நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,507,203 என அதிகரித்துள்ளது. இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 126,162 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 7,867,291 என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிரேசில் நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,653,561 என அதிகரித்துள்ளது. பிரேசில் நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 162,286 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 5,064,344 என்பதும் குறிப்பிடத்தக்கது.