திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: ஞாயிறு, 8 ஆகஸ்ட் 2021 (00:24 IST)

உலக பூனைகள் தினம்

இன்று ( ஆகஸ்ட் 8) ஆம் தேதி உலகப் பூனைகள் தினம் கொண்டாடப்படுகிறது.

பொதுவாகவே வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகள் மீது மக்களுக்கு ரொம்ப பிரியம் இருக்கும். அவர்களின் விளையாட்டு, நம் மீது அவை காட்டும் பாசம் எல்லாம் எப்போதும் மாறாது. அதனால் வெளிநாடுகள் செல்வோர் அதை  தம்முடனே கூட்டிக்கொண்டு போவோரும் உண்டு.

சமீபத்தில்  ஒருவர் தான் செல்லமாக வளர்த்து வந்த பூனைக்கு ரூ.36 கோடி மதிப்புள்ள சொத்துகளை எழுதி வைத்துள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

அதேபோல் இந்தியாவைச் சேர்ந்த ஒரு பெண் தன் வீட்டில் வளர்ந்துவரும் பூனைக்கு வளைகாப்பு நடத்திய வீடியோக்கள் புகைப்படங்கள் பெரும் வைரலானது.

இந்நிலையில், இன்று பூனைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இதற்கு இணையதளத்தில் செல்லப்பிராணிகளை நேசிப்போர் கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர்.