திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 28 ஆகஸ்ட் 2017 (16:39 IST)

நடுகடலில் இரண்டாக பிளந்த கப்பல்: அதிர்ச்சி வீடியோ!!

கருப்பு கடல் பகுதியில் மங்கோலிய சரக்கு கப்பல் ஒன்று நடுக்கடலில் இரண்டாக பிளந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


 
 
The Leonardo என்ர மங்கோலிய சரக்கு கப்பல் 114மீ நீளமானது. நடுகடலில் நங்கூரமிடப்பட்டுருந்த அந்த கப்பல் திடீரென இரண்டாக பிளந்தது. அந்த கப்பலில் இருந்த 11 ஊழியர்களை துருக்கி துறைமுக அதிகாரிகள் விரைந்து மீட்டனர். 
 
ஆனால், கப்பலின் ஒரு பகுதி கடலுக்குள் மூழ்கியது. அந்த கப்பல் தனது பயணத்தை துவங்கி 42 ஆண்டுகள் ஆனதால் இவ்வாறு நடந்திருக்ககூடும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
 
இந்த விபத்து தொடர்பான வீடியோ தற்போது இணையதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
 

நன்றி: euronews