வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 17 ஜனவரி 2021 (08:42 IST)

பதவியேற்கும் ஜோ பிடன்.. கலவரம் செய்ய ட்ரம்ப் ஆதரவாளர்கள்? – அமெரிக்காவில் உச்சக்கட்ட பாதுகாப்பு!

அமெரிக்க அதிபராக ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பிடன் பதவியேற்க உள்ள சூழலில் அமெரிக்காவில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வென்ற நிலையில் எதிர்வரும் ஜனவரி 20ம் தேதி அதிபராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில் கடந்த 6ம் தேதி அமெரிக்க நாடாளுமன்றத்தில் ட்ரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதல் சம்பவம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஜோ பிடன் பதவியேற்கும் முன்னதாக அமெரிக்காவின் 50 மாகாணங்களிலும் ட்ரம்ப் ஆதரவாளர்கள் கலவரம் செய்யலாம் என உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதனால் அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.