1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 3 ஜூன் 2020 (07:35 IST)

மோடியுடன் தொலைபேசியில் பேசிய டிரம்ப்: ஜி7 மாநாட்டிற்கு அழைப்பு!

கடந்த சில மாதங்களாகவே அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்களும் இந்திய பிரதமர் மோடி அவர்களும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர். குறிப்பாக கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வந்தபோது மோடியிடம் மிகவும் நெருக்கமானார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சமீபத்தில் கொரோனாவை குணப்படுத்தும் ஹைட்ரோகுளோபின் மாத்திரைகளை இந்தியா அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்த விஷயத்தில் இந்தியா மீது அமெரிக்கா மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளது என்பது தெரியவந்தது 
 
இந்த நிலையில் இந்தியா-சீனா எல்லை பிரச்சனை தற்போது உச்சத்தில் இருக்கும் நிலையில் இந்தியாவுக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளது அமெரிக்கா. அமெரிக்கா மட்டுமின்றி இந்த விஷயத்தில் ரஷ்யா ஆஸ்திரேலியா உள்பட பல நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு கொடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கொரோனா பாதிப்பால் ஜி7 மாநாடு செப்டம்பர் மாதத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒத்திவைத்துள்ளார். இந்த மாநாட்டில் பங்கேற்க இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். நேற்று இரவு பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசிய அவர், செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் ஜி7 மாநாட்டிற்கு வருகை தரும்படி கூறியதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் கூறியுள்ளன. 
 
மேலும் இரு தலைவர்களும் இந்தியா சீனா பிரச்சினை குறித்து பேசியதாகவும் தெரிகிறது. இதனை அடுத்து வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் ஜி-7 மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்காவுக்கு பிரதமர் மோடி செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது