செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 27 டிசம்பர் 2022 (16:37 IST)

பனிப்புயலால் 60 பேர் பலி; ஸ்தம்பித்த அமெரிக்கா! – மேலும் அதிகரிக்கும் என எச்சரிக்கை!!

US Snow Storm
அமெரிக்காவில் நிலவி வரும் கடும் பனியால் 60 பேர் பலியான நிலையில் பனிப்புயல் மேலும் அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களில் மூழ்கியுள்ள நிலையில் அமெரிக்கா பனியில் சிக்கி தவித்து வருகிறது. வரலாறு காணாத கடும் பனிபொழிவால் அமெரிக்க மாகாணங்கள் பல பாதிக்கப்பட்டுள்ளன. மக்கள் வீடுகளை விட்டே வெளியேற முடியாத சூழல் நிலவுவதால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களையிழந்துள்ளன.

பல மாகாணங்களில் கடும் பனிப்புயல் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 15 ஆயிரத்திற்கும் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சாலை வழியாக பயணிக்க முயன்றாலும் கடும் பனி காரணமாக சாலைகள் வழுக்குவதாலும், பனிமூட்டத்தாலும் பெரும் விபத்துகள் ஏற்படுகின்றன.

இதுவரை பனிப்புயலால் 60 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் பனிப்புயல் வரும் நாட்களில் மேலும் அதிகரிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்க பேரிடர் மீட்பு படையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். கடும் பனிப்பொழிவால் புத்தாண்டை கொண்டாட வேறு நாடுகளில் இருந்து அமெரிக்கா சென்ற பலரும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளனர்.

Edit By Prasanth.K