வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 13 ஜூலை 2020 (15:18 IST)

கொரோனா எல்லா சும்மா.. மாஸ்க்லாம் போட முடியாது! – விடாபிடி வாலிபர் கொரோனாவால் பலி!

அமெரிக்காவில் கொரோனா ஒரு ஏமாற்று வேலை என தொடர்ந்து பேசி வந்த ஒருவர் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்டவற்றை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அரசின் வேண்டுகோளை மக்கள் பின்பற்றி வரும் அதே சமயம் இதெல்லாம் ஏமாற்றுவேலை என பேசுவோரும் எல்லா நாடுகளிலும் இருக்கதான் செய்கிறார்கள்.

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தை சேர்ந்தவர் ரிச்சர்ட் ரோஸ். முன்னாள் ராணுவ வீரரான இவர் கொரோனா பரவ தொடங்கிய காலத்திலிருந்தே இதெல்லாம் ஏமாற்று வேலை என பேசி வந்துள்ளார். கொரோனாவை வைத்து பலர் அரசியல் ஸ்டண்ட் செய்வதாக கூறிய அவர், முகக்கவசம் அணிதல் போன்றவற்றையும் பின்பற்றாமல் இருந்து வந்துள்ளார். இதுகுறித்து சமூக வலைதளங்களிலும் நான் மாஸ்க் அணிய மாட்டேன் என பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். அவரை பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று இருந்தது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.