1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 8 டிசம்பர் 2020 (12:07 IST)

டிக்டாக்கிற்கு இனி தடையில்லை; ட்ரம்ப்பை ஆஃப் செய்த நீதிமன்றம்!

அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு ட்ரம்ப் அரசு தடை விதித்திருந்த நிலையில் அந்த தடை செல்லாது என அமெரிக்க நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் டிக்டாக் செயலிக்கு சில மாதங்கள் முன்னதாக தடை விதிக்கப்பட்ட நிலையில் அமெரிக்காவிலும் டிக்டாக்கிற்கு தடை விதித்து ட்ரம்ப் அரசு உத்தரவிட்டது. ஆனால் டிக்டாக் நிறுவனத்தை அமெரிக்க நிறுவனம் வாங்க இருந்ததால் தடை விதிக்கப்படுவதற்காக கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருந்து.

இந்நிலையில் தற்போது நடைபெற்ற அதிபர் தேர்தலில் அதிபர் ட்ரம்ப் தோல்வியடைந்தார். இந்நிலையில் அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்ட டிக்டாக் செயலி தடை இனி தொடராது என அமெரிக்க நீதிமன்றம் தெரிவித்துள்ளது. டிக்டாக் மீதான ட்ரம்ப் அரசின் தடை தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவு என்பதால் அதை நீக்கியுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.