உலகின் பிரபலமான பெண் மலாலா: கௌரவித்தது ஐ.நா!
2020ஆம் ஆண்டு தொடங்கப்போவதையொட்டி கடந்த 10 ஆண்டுகளில் மிகப்பெரும் சாதனைகள் புரிந்தோர்களை பல்வேறு துறை சார்ந்த அமைப்புகளும் பாராட்டி கௌரவித்து வருகின்றன.
பெண்கள் கல்விக்காக கடந்த பத்து ஆண்டுகளில் அயராது உழைத்தவர் மலாலா யூசுஃப்சாய். தொடர்ந்து பாகிஸ்தான் பெண்களின் கல்வி உரிமைக்காக போராடிய மலாலா மீது 2012ம் ஆண்டு தலீபான்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் அதிர்ஷ்டவ்சமாக தப்பித்த மலாலா தற்போது இங்கிலாந்தில் வாழ்ந்து வருகிறார்.
பாகிஸ்தான் பெண்களின் கல்விக்காக மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள பெண்களின் கல்விக்காக குரல் கொடுத்த மலாலாவுக்கு கடந்த 2014ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அளித்து கௌரவிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் உலகிலேயே மிகவும் பிரபலமான பெண் என்ற கௌரவத்தை ஐக்கிய நாடுகள் சபை மலாலாவுக்கு அளித்துள்ளது.