செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 10 மே 2023 (17:11 IST)

டுவிட்டரில் வீடியோ கால், ஆடியோ கால் வசதி - எலான் மஸ்க்

elan twitter
டுவிட்டர் தளத்தில் இனிமேல் வீடியோ ககால், ஆடியோ கால் வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டர், இன்றைய உலகின் முக்கிய நிகழ்வுகளையும் பிரச்சனைகளையும் பிரதிபலிக்கும் தளமான டுவிட்டர் உள்ளது.

இந்த டுவிட்டர் நிறுவனத்தை கடந்த 2022 ஆம் ஆண்டு உலகின் மிகப்பெரிய தொழிலதிபர் எலான் மஸ்க் வாங்கினார்.  இந்த நிறுவனத்தை வாங்கிய கையோடு, ஆயிரக்கணக்கான ஊழியர்களை நீக்கியதுடன், புளூ டிக்கிற்கு குறிப்பிட்ட தொகையை கட்டணம் செலுத்த வேண்டுமென்று பயனர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.

இந்த நிலையில் உலகம் முழுவதும் 4 கோடி பயனர்களைக் கொண்டிருக்கும் டுவிட்டர் சமூக ஊடகத்தில்  நீண்ட நாட்களாக செயல்படாமல் இருக்கும் கணக்குகள் ஆர்ச்சிக் லைனுக்குக் கொண்டுசெல்லப்படும் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில், பயனர்களுக்கு ஒரு நற்செய்தியை டுவிட்டர் அதிபர் எலான் மஸ்க் கூறியுள்ளார். அதில்,’’டுவிட்டரில் இனிமேல் போன் நம்பரைக் கொடுக்காமலேயே ஆடியோ கால் , மற்றும் வீடியோ காலில் பேசலாம்’’ என்று தெரிவித்துள்ளார்.

இதனால் பயனர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.