1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 30 ஆகஸ்ட் 2023 (16:53 IST)

ஜோ பைடனுக்கு மூளை கலங்கி விட்டது, 3ஆம் உலகப்போருக்கு வாய்ப்பு: டிரம்ப் எச்சரிக்கை..!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு மூளை கலங்கிவிட்டது என்றும் அவரது செயல்பாடுகளால் மூன்றாம் உலகப்போர் வருவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்
 
டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில்  நேர்மை அற்றவராக ஜோ பைடன் இருக்கிறார் என்றும் அதுமட்டுமின்றி முட்டாள் மற்றும் திறமை இல்லாதவராகவும் இருக்கிறார் என்றும் நாட்டின் சூழலுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் அவரது திட்டங்கள் இருக்கிறது என்றும் அவருக்கு மூளை கலங்கிவிட்டது என்று நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.  
 
அமெரிக்க அரசின்  செயல்பாடுகள் காரணமாக மூன்றாம் உலகப் போர் வருவதற்கும் வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.  கடந்த சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்கா மெக்சிகோ எல்லைக்கதவுகள் திறந்ததை அடுத்து டிரம்ப் இந்த கடும் விமர்சனத்தை வெளியிட்டுள்ளார். 
 
ஆனால் அமெரிக்க அரசு இதுகுறித்து கூறியபோது வெள்ள சேதத்திற்காகத்தான் அமெரிக்க-மெக்சிகோ எல்லை கதவுகள் திறக்கப்பட்டதாகவும் சட்டவிரோதமான வகையில் அமெரிக்காவில் நுழைவது குற்றம் என்பது எப்போதும் கடைபிடிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
Edited by Mahendran