புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 3 ஜூலை 2019 (18:20 IST)

187 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் ஆமை!!!!

சிசெல்லிஸ் நாட்டில் வாழ்ந்து வரும் ஒரு ஆமை, தனது 187 ஆவது பிறந்தநாளை கொண்டாடியுள்ள செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.

மனிதர்களின் ஆயுட்காலத்தை விட பல மடங்கு அதிகமான ஆயுட்காலத்தை கொண்ட உயிரினங்களில் ஒன்று ஆமை. அந்த வகையில் சிசெல்லிஸ் நாட்டைச் சேர்ந்த ஜொனாதன் என்ற பெயருடைய ஆமை 187 வயதை தொட்டிருக்கிறது.

அல்டபிரா என்ற வகையைச் சேர்ந்த இந்த ஆமை, 1832 ஆம் ஆண்டு பிறந்தது. தற்போது ஜொனாதன், சிசெல்லிஸ் செயிண்ட் ஹெலெனா என்ற தீவில் ஆளுநருடன் வாழந்து வருகிறது.

1886 ஆம் ஆண்டு ஜொனாத்தனை ஒரு பிகைப்படம் எடுத்தனர், பின்பு தற்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றையும் சேர்த்து, இரண்டையும் ஒப்பிட்டு சமூக வலைத்தளங்களில் #187years challenge என்ற ஹாஷ்டாக்கோடு ட்ரெண்ட் ஆகிவருகிறது.

187 வயது ஜொனாதன் ஆரோக்கியமாக வாழ்ந்துவருகிறது. ஆனாலும் வயது முதிர்ச்சிக்கான அறிகுறிகள் தென்படுவதாக கூறப்படுகிறது. ஜொனாதனின் கண் பார்வை மற்றும் நுகரும் திறனும் குறைந்து வருவதாகவும், அதனை சமன்செய்ய அதிகமான கலோரிகள் நிறைந்த உணவை மருத்துவர்கள் ஜொனாதனுக்கு அளித்துவருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.