1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 28 ஜனவரி 2018 (15:28 IST)

வீட்டு சுவரில் மிகவும் மோசமான துர்நாற்றம்; வீட்டை வாங்கிய பெண்ணுக்கு ஏற்பட்ட அவலம்

அமெரிக்காவில் 13 குழந்தைகளை வீட்டுக்குள் பிணைக்கைதிகள் போல அடைத்து, சங்கிலியால் கட்டிப்போட்டு சித்ரவதை செய்த பெற்றோர் கைது செய்யப்பட்டனர்.
அமெரிக்காவின்  லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் டேவிட் ஆலன் டுர்பின்(57), லூயிஸ் அன்னா டுர்பின் (49) என்ற தம்பத்தியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 2 வயதிலிருந்து 29 வயது வரையிலான 13 குழந்தைகள் உள்ளனர். பெத்த பிள்ளைகள் என்றும் பாராமல் தங்களது 13 குழந்தைகளையும் படுக்கையில் சங்கிலியால் கட்டிப்போட்டு பிணைக்கைதிகள்போல அடைத்து வைத்துள்ளனர். அவர்களை வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே குளிக்க அனுமதிப்பார்கள், மேலும் குழந்தைகள் வீட்டின் அறைகளிலே தங்களின் இயற்கை உபாதைகளை களிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.
 
இந்த நிலையில் அந்த தம்பதியரின் 17 வயது மகள், வீட்டில் இருந்து தப்பித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதைத்தொடர்ந்து போலீஸார் அவரது வீட்டுக்கு சென்று குழந்தைகளை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களின் பெற்றோர்களை கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 
அவர்கள் வாழ்ந்த வீட்டை, வங்கி சீல் வைத்து மூடியது. 36 ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்த வீட்டை பெண் ஒருவர் ஏலத்தில் எடுத்தார். வீட்டினுள் சென்ற அந்த பெண் வீட்டின் அறைகள் கொடூரமாகவும், வீட்டின் சுவர்களில் இருந்து துர்நாற்றம் வருவதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, அதற்கான காரணங்களை கண்டறிந்தார். பெற்றோர்களால் கொடுமையாக சித்ரவதை செய்யப்பட்ட குழந்தைகளை நினைத்து வருந்தினார். அவர்கள் நல்லபடியாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.