திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 25 ஜூன் 2018 (10:25 IST)

உலகின் மிகச்சிறிய கம்ப்யூட்டர்: அரிசியை விட சிறியது

அரிசியை விட சிறிய அளவிலான உலகின் மிகச்சிறிய கம்ப்யூட்டர் ஒன்றை தயாரித்து மிக்சிகன் பல்கலைக்கழகம் சாதனை செய்துள்ளது. இந்த கம்ப்யூட்டர் 0.3 மிமீ அளவில் மட்டுமே உள்ளதால் இந்த கம்ப்யூட்டரை அதில் எரியும் ஒரு சிறிய லைட்டின் மூலம் மட்டுமே கண்டுகொள்ள முடியும்.
 
இந்த சிறிய கம்ப்யூட்டரில் பவர் எப்போதும் இருந்து கொண்டே இருக்க வேண்டும். ஒருமுறை பவரை இழந்துவிட்டால் அதில் உள்ள டேட்டா அனைத்தும் அழிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த கம்ப்யூட்டரில் டேட்டாக்கள் ரேடியோ ஆண்டெனாகள் மூலம் பெறப்படுகிறது. இதற்கு முன்னர் ஐபிஎம் நிறுவனம் 1மிமீ அளவில் தயாரித்த கம்ப்யூட்டரே உலகின் மிகச்சிறிய கம்ப்யூட்டராக இருந்த நிலையில் அந்த சாதனையை மிக்சிகன் பல்கலையின் கம்ப்யூட்டர் தகர்த்துள்ளது. இந்த கம்ப்யூட்டர் பொதுமக்கள் வழக்கத்திற்கு வர வாய்ப்பில்லை என்றும், சாதனைக்காக மட்டுமே இந்த கம்ப்யூட்டர் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.