திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 12 நவம்பர் 2022 (15:03 IST)

முதலையை விழுங்கிய பாம்பு..வைரலாகும் வீடியோ

snake
அமெரிக்கா நாட்டின் புளோரிடா மாகாணத்தில் மலைப்பாம்பு ஒன்று 5 அடி நீளமுள்ள முதலையை விழுங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

புளோரிடா மாகாணத்தில் 16 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று, 5 அடி நீளமுள்ள ராட்சத முதலையை விழுங்கியது.

விலங்கியல் அறிஞர்கள் இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னனர், அந்த மலைப்பாம்பைக் கொன்று, அது விழுங்கிய முதலையை வெளியே எடுத்தனர்.

புளோரிடாவில் மிதமான வெல்ல மண்டல சூழல் விரைவான இனப்பெரிக்கம் ஆகியவற்றின் காரணமாக அதிகளவில் மலைப்பாம்புகள் இருப்பதாகவும்,  இந்த மலைப்பாம்பை நெக்ரோஷ்கோபி மற்றும் அறிவியல் மாதிரி சேகரிப்பு மையத்திற்கு அனுப்பி இதுகுறித்து ஆராய்ச்சி செய்யப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.

மலைப்பாம்பு முதலையை விழுங்கியபின் அதை வெளியே எடுக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Edited by Sinoj