செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 26 ஜூன் 2021 (22:23 IST)

விமானத்தில் இருந்து கீழே குதித்த நபர் ...

அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஒரு விமானத்தில் அமர்ந்திருந்த பயணி திடீரென்று கீழே குதித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் இருந்து சால்ட் லேக் நகருக்கு புறப்பட்ட   யுனைட்டட் எக்ஸ்பிரஸ் விமானத்தில் அமர்ந்திருந்த பயணி அங்குள்ள அவசரகால வாசல் வழியாக கீழே குதித்தார்.

இதைப் பார்த்த விமானி உடனே விமானத்தை நிறுத்தினார். அப்போது கீழே குதித்த நபரை மீட்டனர். அவருக்கு உடலில் பலத்தை காயம் ஏற்பட்டிருந்தது. உடனடியான விமானம் டாக்சிவேயில் இருந்து மீண்டும் விமானநிலையத்திற்குத் திரும்பியது.

இதுகுறித்து விமானநிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.