1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 15 மார்ச் 2024 (19:34 IST)

12 லட்சம் தவறுதலாக நன்கொடை அளித்த நபர்! என்ன நடந்தது?

donation
கலிபோர்னியாவை சேர்ந்த நபர் ஒருவர் 12 லட்சம் ரூபாய்  நன்கொடை அளித்தத்திற்குப் பின் சுவாரஸ்ய சம்பவம்  நடந்துள்ளது.
 
அமெரிக்கா நாட்டில் கலிபோர்னியாவைச் சேந்தவர் மைக்கேல்(31). இவர் வங்கதேசத்தில் ஏழ்மையில் வாடுபவர்களுக்கு நன்கொடை அளிக்கும் நோக்கத்தில் ரூ.12,000 என பதிவிடுவதற்குப் பதில், தவறுதலாக ரூ.12,00,000 எனப் பதிவிட்டிருக்கிறார்.
 
அந்தப் பணம் அவர்களுக்குச் சென்ற பிறகுதான், மைகேலுக்கு தான் அனுப்பியது 12 ஆயிரம் ரூபாயல்ல, அது 12 லட்சம் ரூபாய் என்று. உடனே  அந்த நிறுவனத்தை தொடர்புகொண்டு, நடந்தது பற்றி கூறியதும், அவர்கள் அப்பணத்தை திருப்பி அனுப்புவதாக உறுதியளித்தனர். ஆனால் அதற்குள் இவர் பெரிய தொகை அளித்தது மகளுக்கு தெரியவந்ததை அடுத்து, அவர்கள் நன்றி கூறி மைக்கேலுக்கு வீடியோ அனுப்பியுள்ளனர். 
 
எனவே குற்றவுணர்வு ஏற்பட்ட அவ்ர் அதே தொகையை மீண்டும் நன்கொடை அளித்துள்ளார். அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.