புதன், 12 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Dinesh
Last Modified: புதன், 6 ஜூலை 2016 (15:49 IST)

சூப்பர்மேன் படத்தின் கதாநாயகி மரணம்

சூப்பர்மேன் தொடர்கதையின் முதல் கதாநாயகியாக நடித்த நோயல் நீல் (95) மரணமடைந்தார்.  சில ஆண்டுகளாக நோய் வாய்ப்பட்டிருந்த நோயல், அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் டஸ்கானில் உள்ள தனது இல்லத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை உயிரிழந்தார்.


 


அமெரிக்காவின் மின்னே போலீஸில் 1920,  நவம்பர் 25-ல் நோயல்  நீல் பிறந்தார். பள்ளி படிப்பை முடித்ததும் கலிபோர்னியாவுக்கு புலம்பெயர்ந்த நீல், அங்குள்ள ஒரு  உணவகத்தில் பாடகராக பணிக்கு சேர்ந்தார். அதன் மூலம் ஹாலிவுட்டின்  பாராமவுண்ட் ஸ்டூடியோவின் இணைப்பு அவருக்கு கிடைத்தது.

பின்னர், 1940-ல் திரைப்படங்களில் சிறிய வேடங்களில் தலை காட்டி வந்த நோயல்லின் திறமையை கண்டு கொலம்பியா பிக்சர்ஸ் நிறுவனம் 1948ல் சூப்பர்மேன் திரைப்படத்தில் அவரை நடிக்க வைத்தது. இந்தப் படத்தில் சூப்பர்மேன் கதாபாத்திரத்தில் கிரிக் அலினும், அவரது தோழியாக வரும் லேன் கதாபாத்திரத்தில் நோயல் நீலும் நடித்தனர்.

பின்னர் 1950-ல் ஜார்ஜ் ரீவிஸ் நடிப்பில் உருவான சூப்பர்மேன் தொலைக்காட்சி தொடரிலும் 1978-ல் திரைப்படமாக உருவான சூப்பர்மேனிலும் நோயல் நடித்தார். லூயிஸ்லேன் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்ததற்காக நோயலுக்கு மெட்ரோ போலீஸில் 2010-ல் சிலை நிறுவப்பட்டது குறிப்பிடதக்கது.