புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinojkiyan
Last Updated : திங்கள், 16 டிசம்பர் 2019 (20:27 IST)

வயலில் எரிந்த தீயை... தனி ஒருவராய் அணைத்த விவசாயி : வைரல் வீடியோ

உலகில் எங்கு என்ன விஷயம் நடந்தாலும், இப்பொழுது உள்ள தொழில் நுட்பம் மற்றும் இணையதளங்களின் அசாதாரண வளர்ச்சியால் எளிதில் அறிந்து கொள்ள முடிகிறது. இந்நிலையில், வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர்  தீயில் இருந்து வயலை மீட்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவருகிறது.
வெளிநாட்டை சேர்ந்த ஒரு நபரின் வயலில் திடீரென தீப்பிடித்தது,. அடுத்து என்ன செய்வது யோசித்த அவர் தனது, டிராக்டரை கொண்டு, தீ பரவுக்கின்ற இடத்திற்கு அருகில் பூமியை நோக்கி உழுவது போல் ஆழமாக ஒரு இடைவெளி உள்ள மாதிரி நிலத்தை உழுதார். சுமார் 10 அடிக்கு இருந்த அந்த இடைவெளியைத் தாண்டி தீ அடுத்த பக்கத்திற்கு தாண்டிச் செல்லவில்லை. மீதி இருந்த வயலும் மீட்கப்பட்டது.
 
இந்த வீடியோ  சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவருகிறது.மேலும் அந்த விவசாயி சாதுர்யமாக செயல்பட்டதற்கு அனைவரும் பாராட்டி வருகின்றனர்.